Header Ads



கிராமம் கிராமமாக விஜயம்செய்யும் ஜனாதிபதியை, தேரர்கள் பாராட்டி ஆசிர்வாதம் வழங்கினர்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (07) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். 

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை தியவடன நிலமே நிலங்கதேல வரவேற்றார்.

தலதா மாளிகை வளாகத்தில் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தேரரின் நலம் விசாரித்ததுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். 

புராதன காலத்தில் காணப்பட்ட பசுமையான கிராமத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கிராமம் கிராமமாக விஜயம் செய்யும் ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டத்தை தேரர்கள் பாராட்டினர். 

கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாதென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், விவசாயத்தின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவது கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவேயாகும் என்று குறிப்பிட்டார். 

பிரச்சினைகளை தீர்த்து நாட்டின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். 

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், மல்வத்து மகா விகாரைக்கு சென்று, மல்வத்து மகாநாயக்க சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். 

மல்வத்து பீடத்தின் அனுநாயக்க சங்கைக்குரிய திம்புல் கும்புரே விமலதம்ம தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தேரரின் நலனை விசாரித்து அறிந்து கொண்டார். அனுநாயக்க தேரர் தங்கியுள்ள விகாரை இலங்கை கடற் படையினரால் புனர்நிர்மாணம் செய்யப்படுவதையும் அவதானித்த ஜனாதிபதி அவர்கள், உடனடியாக அதனை முழுமைப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார். 

ஜனாதிபதி அவர்கள் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க சாஸ்திரபதி பண்டித ஆனமடுவே ஸ்ரீ தம்மதசி தேரரை சந்தித்தபோது, எவ்வகையான தடைகள் வந்தாலும் எதிர்கால வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பலமும் தைரியமும் பெற வேண்டுமென தேரர் ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்தார். 

அதனைத் தொடர்ந்து அஸ்கிரி கெடிகே ரஜமகா விகாரைக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி சாஸ்திரபதி பண்டித சங்கைக்குரிய வெண்டருவே உபாலி அனுநாயக்க தேரரை சந்தித்து நலன் விசாரித்ததுடன், சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். 

தம்புலு விகாராதிபதி கலாநிதி கொடகம மங்கள தேரரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டார். 

மல்வத்து மகா விகாரையில் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், பல்வேறு மத, சமூக விடயங்களை கலந்தாலோசித்தார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.04.07

No comments

Powered by Blogger.