Header Ads



சூரியன் உச்சம் கொடுப்பதால், அதிகளவு நீரைப் பருகுமாறு அறிவுரை


நேற்று முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையின் மீது சூரியன் உச்சமடையும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக நேற்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

நேற்று தெல்வத்தை, பத்தேகம, தெதியவல, முலதியன,அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் உடமலல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுத்தது.

நாட்டின் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முற்பகல் 10 மணி முதல்,பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில் வெளியில் செல்வதை மக்கள் தவிர்ப்பது சிறந்தது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உடல் வறட்சி, தலைவலி, உடல் எரிச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.

அதனால் அதிகளவு குடிதண்ணீரைப் பருகுமாறு சுகாதாரத் திணைக்களம் கேட்டுள்ளது. (தினக்குரல்)

No comments

Powered by Blogger.