Header Ads



ரணில் விடுத்துள்ள அறிவிப்பு


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக, சட்டவாக்கத்துறை, நீதித்துறை மற்றும் அமைச்சரவை என்பனவற்றின் அதிகாரம் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நிதி மையத்தை உருவாக்குவது தொடர்பில், கடந்த 2016ஆம் ஆண்டு, தாம் அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டது.

ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் முழுமையான அபாயமானதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டவாகத்துறை, நீதித்துறை, அமைச்சரவை ஆகியவற்றின் அதிகாரம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த நாட்டிலும் இவ்வாறான செயற்பாடு இடம்பெற்றதில்லை.

ஏன் இவ்வாறானதொரு சட்டமூலம் முன்வைக்கப்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேநேரம், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவன் இன்னும் இங்கேயா சுத்திக்கிட்டு இருக்கிறான்...
    எக்ஸோ சுந்தரனே இவனை முதலில் காட்டிற்கு துரத்தி விடனும்

    ReplyDelete

Powered by Blogger.