Header Ads



மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் சாதனை


சர்வதேச ரீதியான இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில்  விஷேட தங்க விருது மற்றும் வெண்கல விருதுகளை பெற்று மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் சாதனை 

Indonesian Young Scientist Association - IYSA மற்றும் International Music, Science, Energy and Engineering Fair, Turkey இனைந்து அண்மையில் நடாத்திய சர்வதேச ரீதியாக 23 நாடுகளின்  பங்குபற்றுதலுடன்   2215 க்கு மேற்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களும் 443 குழுக்கள் இணைந்து பங்குபற்றிய இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான  போட்டியில் ( Covid19 காரணமாக நேரடியாக நடைபெற இருந்த போட்டி Online மூலம் நடைபெற்றது)

மாத்தறை பல்கலைக்கழக கல்லூரியில் Department of Applied and Natural science இல் கல்வி பயிலும் மாணவர்களான சவ்பாத், நப்ஹா, ஸந்தூசி, ஸைனப், அப்சரா ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டு 

சர்வதேச ரீதியாக Indonesian Young Scientist Association இன் Bronze பதக்கமும் மற்றும் Malaysia Innovation Invention Creativity Association இன் விஷேட விருதான Gold Special Award (Environmental Science University category)  பெற்று சாதனை படைத்து உள்ளனர். 

இப்போட்டியில் இலங்கை நாட்டின் சார்பில் பங்குபற்றிய ஒரே ஒரு குழு என்பது குறிப்பிடத்தக்கது. 

இம் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு இந்த சாதனைகளை பெற  உதவிய மாத்தறை  பல்கலைக்கழக கல்லூரி விரிவுரையாளர்களுக்கும், ஏனையவர்களுக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

தகவல்: புத்தாக்குணர் கழகம் மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி 

1 comment:

Powered by Blogger.