April 18, 2021

சிதைவடைந்து வரும் மத்திய கிழக்கின் அரசியல் ஒழுங்கு, சந்தர்ப்பத்தை பயன்படுத்தக் காத்திருக்கும் யுத்த வெறியர்கள்


- லத்தீப் பாரூக் -

மத்திய கிழக்கின் அரசியல் ஒழுங்கு சிதைவடயத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அவர்களால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் ஆகிய யுத்த வெறியர்கள் தயாராகி வருகின்றனர்.

வுhந ஆனைனடந நுயளவ ஊசளைளை குயஉவழசல (மத்திய கிழக்கு ஒரு நெருக்கடி தொழிற்சாலை) என்ற புதிய நூலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயாத் அல் பக்தாதி மற்றும் அஹமட் கட்னாஷ் ஆகிய செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த நூலை எழுதி உள்ளனர். சுழற்சிமுறை கொடுங்கோல் ஆட்சி, மேலைத்தேச தலையீடுகள், பயங்கரவாதம் என்பனவற்றில் இருந்து முன்னேறிச் செல்வதற்கான ஒரு வழிமுறையைத் தேடும் முயற்சியாக இந்த நூல் உருவாகி உள்ளது. பக்தாதி என்பவர் ஒரு பலஸ்தீன தொழில்முயற்சியாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் நோர்வேயில் ஒரு அரசியல் அகதி. கட்னாஷ் என்பவர் லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள ஒரு லிபிய அரசியல் அகதி.

மத்திய கிழக்கின் நிலைமையைப் புரிந்து கொள்ள சில விடயங்களை மீட்டிப் பார்க்க வேண்டும். மத்திய கிழக்கு முழுவதும் முன்னர் துருக்கி சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது. முதலாவது உலகப் போரில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய காலணித்துவவாத சக்திகளால் துருக்கிப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அதன் பிறகு இந்தக் காலணித்துவ சக்திகளின் கீழ் கொண்டு வரப்பட்ட மத்திய கிழக்கு துண்டு துண்டாகக் கூறுபோடப்பட்டது. அவ்வாறு கூறு போடப்பட்ட ஒவ்வொரு பிராந்தியத்திலும் தமக்கு விசுவாசமானவர்களை இந்த ஆதிக்க சக்திகள் ஆட்சி பீடத்தில் அமர்த்தின.

அதேNபுhல் மறுபுறத்தில் பலஸ்தீன மக்களை விரட்டியும் துரத்தியும் அடித்து, படுகொலைகளைப் புரிந்து மத்திய கிழக்கின் இருதயப் பகுதியில் இஸ்ரேலையும் அவர்கள் ஸ்தாபித்தனர். அந்தப் பிராந்தியத்தில் யுத்தங்களைத் தூண்டிவிட்டு முழு மத்திய கிழக்கையும் துவம்சம் செய்வதே இஸ்ரேலின் பிரதான இலக்கு. நூறு ஆண்டுகள் கழிந்தும் மத்திய கிழக்கின் அவல நிலையில் இன்றும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இன்று முழு மத்திய கிழக்கும் கொந்தளிப்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் இருந்த பெரும்பாலும் அபிவிருத்திக் கண்ட, மிக முக்கிய செல்வந்த நாடுகளான ஈராக், லிபியா, சிரியா ஆகிய மூன்று நாடுகளும் அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய மற்றும் இஸ்ரேலிய யுத்த வெறியர்களால் இன்று கொலைகளமாக மாற்றப்பட்டு சுடுகாடுகள் ஆக்கப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் இவர்களின் மிகச் சிறந்த கூட்டாளிகளான சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் சேர்ந்து பிராந்தியத்தின் வறுமை மிக்க மிகப் புராதன நாடான யெமனை குண்டு வீசி தாக்கி அழித்து வருகின்றன. யெமன் இப்போது கட்டாந்தரையாக்கப்பட்டுள்ளது.

அரபு வசந்தத்தின் போது மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். ஆனால் அந்த மக்கள் புரட்சி இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்பட்டது. இவ்வாறு தான் மத்திய கிழக்கு முழுவதும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. இதிலிருந்து முன்னேறிச் செல்லும் ஒரு வழியைக் கோடிட்டுக் காட்டும் வகையில் தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்த நூல் பற்றி ஊடகவியலாளர் ஜொய்ஜில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். மத்திய கிழக்கின் அரசியல் ஒழுங்கு சரிந்து விழும் நிலைக்கு வந்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் கௌரவமான எதிர்காலத்துக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் போராடும் மக்கள் தற்போதைய அதிகார ஒழுங்கு முறையில் இருந்து விடுபடும் மறுசீரமைப்பு பற்றி எவ்வித நம்பிக்கையும் இன்றி உள்ளனர்.

இதில் பாதி வரலாறு, பாதி மனித உரிமைப் பிரகடனம், இன்னும் பாதி மேற்குலக அரசுகளுக்கான ஆரோசனைக் குறிப்பு என விரிவாகக் காணப்படுகின்றது. மேலைத்தேச தலையீட்டின் வரலாறு, சர்வாதிகாரத்துடன் கூடிய இழிவான கூட்டணிகள், காலணித்துவத்துக்குப் பிந்திய அரசுகளின் தோல்விகள் என்பனவும் இன்றைய நிலைக்கு வழிவிட்டுள்ளன.

பல தசாப்தங்கள் செல்லக் கூடிய ஒரு மாற்றம் அங்கே எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அது இலகுவானதாக அமையப் போவதும் இல்லை. ஏற்கனவே கடந்த 40 வருடங்களாக யுத்தங்களை மட்டுமே கண்டுள்ள நிலையில் ஆக்கிரமிப்புக்களாலும் இன ஒழிப்பு செயற்பாடுகளாலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள பின்னணியில் இன்னும் இலட்சக் கணக்கானவர்கள் அகதி முகாம்களுக்குள் அடைபட்டுள்ள நிலையில் எதிர்ப்பார்க்கப்படும் மாற்றங்கள் நிச்சயம் இலகுவானதாய் அமையப் போவதில்லை.

மத்திய கிழக்கு முழுவதும் 2011 முதல் இடம்பெற்று வரும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் பாரம்பரிய தேசியவாதத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் இஸ்லாமிய மயமாக்கலையும் கடந்து நிற்கின்றன.

சிரியாவின் எழுச்சி அஸாத் அரசு அதற்களித்த பதிலடி என்பன எதோச்சாதிகாரத்துக்கும் அல்லது சர்வாதிகாரத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையிலான உறவுகளை அடையாளமிட்டுக்; காட்டும் ஒரு முக்கியமான உதாரண நிகழ்வாக உள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை அரச படைகள் ஈவு இரக்கமிக்றி நசுக்கின. அதேநேரம் 2011 எழுச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே சிரியாவின் ஆள்புலத்துக்குள் இருந்து கொண்டு ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராகச் செயற்படும் இஸ்லாமிய ஆயுதபாணிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஈராக்கில் உள்ள பாத்திஸ அரசும் சிரியாவும் சர்வாதிகாரத்தின் உதாரணங்களாகக் காணப்பட்டன. அது அவர்களை ஏகாதிபத்தியத்தின் எதிரிகளாகக் காட்டியது. இருந்தாலும் தமது செயற்பாடுகள் மூலம் இறுதியில் அவர்கள் தத்தமது நாடுகளில் வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளுக்கு வழிவிட்டனர்.

இவ்வாறான அரசுகள் தான் வெளிநாட்டு ஆதிக்க சக்திகள் அழிவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்திய தமது யுத்தங்களையும் ஆக்கிரமிப்புக்களையும் நியாயப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு வழியமைத்தன. 1990ல் குவைத் மீதான சதாமின் படையெடுப்பு அதனைத் தொடர்ந்து 1991ல் அமெரிக்கா தலைமையிலான யுத்தம், பிற்காலத்தில் 2003ல் ஜோர்ஜ் புஷ் நடத்திய ஆக்கிரமிப்பு என எல்லாவற்றுக்கும் இந்த அரசுகள் தான் காரணங்களாய் அமைந்தன.

கொடுங்கோல் ஆட்சியாளர்களின் படையினருக்கும் மேலைத்தேச நவ காலணித்துவவாதத்துக்கும் இடையிலான கூட்டுவாழ்வு அதனோடு தீவிரவாதத்துக்கு உள்ள தொடர்பு என்பனவற்றை புடம்போட்டு காட்டுவதாக இவை அமைந்தன.

சதாமைப் பொருத்தமட்டில் மேலைத்தேச சக்திகளையும் மீறி சர்வாதிகாரம் அங்கு நீடித்தது. குவைத்தை அவர் ஆக்கிரமித்தபின் அவர் மீது கொண்டு வரப்பட்ட பாரதூரமான தடைகள் மிகவும் பொறுப்பற்றதாக இருந்ததோடு அடுத்த கட்ட யுத்தங்களுக்கும் வழியமைத்தது.

இந்த நூலாசிரியர்கள் இந்தப் பிராந்தியத்தின் இராணுவ ஆக்கிரமிப்பு வரலாறுகளைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். மக்கள் மீது மிக மோசமான பாதிப்புக்களைக் கொண்டு வந்த பல்வேறு தடைகளையும் அவர்கள் எதிர்த்துள்ளனர். ஆனால் சிரியா மற்றும் ஈரான் அகிய நாடுகளில் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவும் அவர்கள் தவறி உள்ளனர்.

அவர்களது வாதம் எதுவெனில் தலைமையில் உள்ள தனிநபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் சொத்துக்களுக்கு எதிராகக் கடுமையான தடைகள் கொண்டு வரப்பட வேண்டும. அதுவே மிகவும் தாக்கம் மிக்கதாக இருக்கும் என்பதாகும். இது மக்கள் மீதான அடக்குமுறை மற்றும் சுமைகள் என்பனவற்றைக் கணிசமாகக் குறைப்பதாக அமையும். ரஷ்யாவில் விலாடிமிர் புடின் மற்றும் அவரது சகாக்களுக்கு எதிராகக் கொண்ட வரப்பட்ட மெக்னிட்ஸ்கி சட்டம் போன்ற நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும் என இவர்கள் வாதிட்டுள்ளனர்.

இதில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் ஏனைய சட்டக் குழுக்களுக்கும் கொடுக்கப்படடுள்ள இன்னொரு முக்கிய தகவல் உலகளாவிய அதிகார வரம்பு சட்டங்கள் பற்றியதாகும். அஸாத் அரசின் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் ஜெர்மன் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளின் நீதிமன்றங்களில் நிறுத்த இதில் ஏற்பாடுகள் உள்ளன.

ஹமாஸைப் பொருத்தமட்டில் இரண்டாவது இன்திபாதா போராட்;டத்தில் இஸ்ரேலிய சிவிலியன்கள் மீது அவர்கள் தொடுத்த பல தாக்குதல்களின் பின் அவர்கள் தமது மூலோபாயத்தை மாற்றி உள்ளனர். தேர்தல் செயற்பாடுகள், பிரபலமான அணிதிரட்டல் என்பனவற்றை ஆதரிப்பதோடு மோதல்களுக்கான முடிவாக இராஜதந்திர தெரிவுகளையும் அவர்கள் நாடி உள்ளனர். ஆனால் இவை எல்லாவற்றையும் இஸ்ரேலும் அதன் மேற்குலக நேச அணிகளும் இழுத்து மூடி உள்ளன.

சமாதானச் செயற்பாடுகளுக்கு எதிராக நீண்டகாலமாக நீடிக்கும் பென்ஜமின் நெத்தன்யாஹுவின் ஆயுத பாணி பயங்கரவாதத்தை அவர்கள் அடையாளம் கண்டுள்ள போதிலும் அதேபோன்ற நிலையை பிராந்தியம் முழுவதும் உள்ள அரசுகளில் அவர்கள் கண்டுள்ள போதிலும், ஹமாஸின் இந்தப் பரிணாம மாற்றத்தை நூலின் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

இதற்கு எதிரான எதிர்ப் புரட்சிக்கு சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தலைமை தாங்குகின்றார். அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் செயித் மற்றும் எகிப்தின் அப்துல் பத்தாஹ் அல் சிசி உற்பட அவர்களின் நேச அணியினர் அதற்கு பக்க பலமாக நிற்கிறனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment