Header Ads



நாங்கள் பாடம் கற்றுக்கொண்டோம், அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம் - சஜித்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான யோசனையை கட்சி ஆதரிக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்துவதற்கு பல கட்சிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்த விவாதங்கள் மேலும் சூடுபிடித்துள்ளன.

கட்சியின் பல மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய சஜித் பிரேமதாஸ, கட்சி ஒரு பொதுவான வேட்பாளரை ஆதரிக்காது என்றும், கட்சித் தலைவர் அடுத்த தேர்தலுக்கான வேட்பாளராக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், “2015 இல் நாங்கள் எங்கள் பாடங்களை கற்றுக்கொண்டோம், நாங்கள் அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம்" என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

No comments

Powered by Blogger.