Header Ads



கடினமான பாதையை கடந்து வந்தவருக்கு, இலங்கையின் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது


விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரான கலாநிதி நவரட்ணராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாக இந்த விருது கருதப்படுகின்றது.

சஞ்சிகையொன்றில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய ஆராய்ச்சி சபையினால் நேற்றைய தினம் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மெய்நிகர் தொழிநுட்பத்தின் ஊடாக இந்த விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடினமான பாதையை கடந்து வந்து இவ்வாறு விருது வென்றெடுப்பது அளவில்லா மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த தருணத்தில் தனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் கலாநிதி நவரட்ணராஜா தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்பனவற்றில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ள கலாநிதி நவரட்ணராஜா தற்பொழுது பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலாநிதி நவரட்ணராஜா டிக்கோயா போர்டைஸ் தமிழ் வித்தியாலயம், புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் ஹட்டன் ஹைலன்ட்ஸ் மத்திய கல்லூரி என்பனவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


1 comment:

Powered by Blogger.