Header Ads



மாடறுப்புக்கு எதிரான சட்டம் விரைவில் அமுல், வயது முதிர்ந்த மாடுகளை ஏற்றுமதி செய்ய ஏற்பாடு


மாடறுப்புக்கு எதிரான சட்டத்தைக் விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள புத்த சாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, இது தொடர்பான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள், சட்ட மா அதிபருடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், வயதான மாடுகள் தொடர்பில் எழும் பிரச்சினைக்குத் தீர்வாக, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாடறுப்புக்கு எதிரான யோசனை, 2020 செப்டெம்பரில், அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் ஊடாக, உள்நாட்டில் மாடுகள் அறுக்கப்படுவது தடுக்கப்படுகின்ற போதிலும், வெளிநாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செயலாளர் கூறியுள்ளார்.

பால் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் நோக்கிலேயே, உள்நாட்டில் மாடறுப்புக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் மாடுகள் மற்றும் கன்றுகள் அறுக்கப்படுவதால், பால் உற்பத்தியாளர்கள் நட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வயதான மாடுகள் தொடர்பில் எழும் பிரச்சினைக்குத் தீர்வாக, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளதென்றும் அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தால் பாதிக்கப்படுபவர்களுக்குத் தீர்வு வழங்குவதற்கான உடன் திட்டமொன்று இப்போதைக்கு இல்லையென்றும், பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. MANITHARKALAIPOL MAADUKALUKKUM
    BIRTH CERTIFICATE PATHIVU SHEIYAVENDUM.
    SRILANKA NAADU EVVALAVU MUNNETRAM
    ENPATHANAI ARINDUKOLLA MUDIKIRATHU.

    ReplyDelete
  2. What a Decision... Better you all nuts export your old parents also..

    ReplyDelete

Powered by Blogger.