Header Ads



ACJU க்கு எதிரான விமர்சனம் எனும் பெயரில், பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுவோரின் வலைகளில் சிக்க வேண்டாம்


முஸ்லிம் சமூகம் மிகவும் நெருக்கடியானதொரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் மழை காலத்தில் புத்துகளில் இருந்து ஈஸல்கள் வருவதை போன்று முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்தே பலர் அவ்வப்போது ஊடகங்களிலும் சமூக வலைத்தலங்களிலும் தோன்றி முஸ்லிம் அமைப்புக்கள் தொடர்பாகவும், நிறுவனங்கள் தொடர்பாகவும், தனிநபர்கள் தொடர்பாகவும் விமர்சனம் எனும் பெயரில் இட்டுக் கட்டுகளையும், கற்பனை கதைகளையும் புணைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

விமர்சனம் எனும் பெயரில் பிழையான உண்மைக்கு புறம்பான விடயங்களை மக்கள் மயப்படுத்தும் பாரிய குற்றத்தை செய்வது ஒரு புறமிருக்கஇன்னொரு சாரார் இட்டுக்கட்டுக்களையும் விமர்சனம் எனும் பெயரில் முன்வைக்கின்ற விடயமும் இல்லாமல் இல்லை.

விமர்சனம் என்பது ஒரு விடயத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாகும். ஆனாலும் விமர்சனம் செய்வதற்கான ஒழுங்குகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக ஒரு விடயத்தை பற்றி நல்ல எண்ணத்துடன் விமர்சனம் செய்ய முற்படுகின்றவர் அவ்விடயம் தொடர்பாக அறிந்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்து அது தொடர்பில் தெளிவை பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு உண்மைத் தன்மையை உரியவர்களிடமிருந்து பெற தவறும் போது தான் பிரச்சினைகள் உருவாகின்றன.

அதே நேரம் வாசகர்களும் ஒரு விமர்சனம் எழும் போது அது தொடர்பில்  உண்மைகளை அலசி உரிவயர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அந்த வகையில் சகோதரர் லதீப் பரூக் எனும் எழுத்தாளர் அவ்வப்போது தொடராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்பில் ஒரே வகையான குற்றச்சாட்டுக்களை அடிக்கடி சமூக வலைத்தலங்களிலும் இணையதளங்களிலும் பதிவேற்றி வருவதை அவதானிக்க முடிகிறது. இந்த சகோதரர் ஒரே குற்றச்சாட்டை அடிக்கடி பதிவிடும் போது வாசகரான எனக்கு இவர் உண்மையான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றாரா, அது தொடர்பில் உரிய தரப்பினரை சந்தித்து அவர்களின் தவறை சுட்டிக்காட்டியுள்ளாரா அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றாரா என்கின்ற ஒரு சந்தேகம் எழுந்தது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை விமர்சனம் செய்யும் இச்சகோதரருக்கு கொழும்பில் அமைந்துள்ள ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு சென்று இவரின் விமர்சனங்களை உரிய முறையில் சொல்ல எவ்வளவு நேரம்தான் எடுக்கப்போகின்றது. அல்லது இவர் அதனை செய்யமல் தொடர்ந்து ஒரே குற்றச்சாட்டை விடயம் அறியாமல் எழுதுவதில் தான் என்ன பலன் இருக்க போகிறது.

அந்த குற்றச்சாட்டுக்களில் குறிப்பாக ஹலால் சான்றிதழ் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்ய உரிய தரப்பினரை அணுகியதில் பின்வரும் விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அவற்றை பார்க்கின்ற போது அவரால் முன் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் விடயமாக அவர் பூரண தெளிவில்லாமல் எழுதியிருப்பது தெளிவாகியது. அவ்விடயங்களில் சிலதை சக வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

ஹலால் சான்றிதழ் தொடர்பில் விமர்சிக்கின்ற விமர்சனங்கள் தொடர்பில்......

ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அப்பிரிவில் நிறைவேற்று அதிகாரியாக பணி புரிந்த அல்ஹாஜ் பைஸல் அவர்களின் வாக்கு மூலம் உள்ளடங்கிய இலாப நோக்கற்ற ஹலால் பிரிவின் சேவைகள் என்ற கட்டுரை ஒன்று சுமார் 2 மாதங்களுக்கு முன்னால் வெளிவந்திருந்தது. அதில் மிகவும் தெளிவாக விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை வாசிக்கின்எற போது ஹலால் தொடர்பான பல விடயங்களுக்கான தெளிவுகள் இலகுவாக கிடைத்து விடும் என நம்புகின்றேன். 

அல்ஹாஜ் பைஸல் அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் இலங்கையின் முன்னனி பண்ணையான பைரஹா நிறுவனத்திலும் பல காலம் பணியாற்றிய பறைவைகள் மற்றும் மிருகங்கள் தொடர்பான பூரண அறிவுள்ள ஒருவராவார். இவர் தனது கட்டுரையில் இலங்கையில் ஹலால் அறிமுகமும் அதனை முன்னெடுத்த ஆரம்ப கருத்தாக்கள் தொடர்பிலும் எழுதியிருக்கிறார்.

அது தவிர ஹலால் செயற்பாடானது இலாபகரமற்ற செயன் முறை என்பதை கண்க்றிக்கைகளை மேற் கோற்காட்டி குறிப்பிட்டுள்ளதுடன் அதன் செயன் மறை தொசர்பிலும் விளக்கியுள்ளார்.

கட்டுரை https://www.dropbox.com/s/bdwphrchmqrgqw2/Halal%20%20Article.pdf?dl=0 

முஸ்லிம் விவாக விவாகரத்து தொடர்பான தனியார் சட்ட திருத்தம் தொடர்பான குற்றச்சாட்டு....

உண்மையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா கோட்டை விட்டது என்கின்ற விமர்சனம் ஒரு தலைப்பக்க சார்பான விமர்சனம் என்பதை விமர்சனம் செய்வோரும் நன்றாகவே அறிவார்கள். முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அவர்களின் காலம் முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளும் சட்டத்தரணி சலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் இருந்து பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் பணிகளை செய்து வந்தனர்.

குறிப்பாக நிருவாக விடயங்களில் பாரிய மாற்றங்கள் தேவை என்பதை இறுதியறிக்கையை இரண்டாக பிரிந்து இரண்டு பரிந்துரைகளை வழங்கிய இரண்டு குழுக்குளும் ஏற்றுக் கொண்டன. ஒரு குழுவாக நியமிக்கப்பட்டவர்கள் கொரவ ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் தலைமையில் ஒரு பரிந்துரையையும் கௌரவ சட்டத்தரணி சலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் ஒரு பரிந்துரையையும் வழங்கப்பட்டிருந்தது. இவ்விரண்டு பரிந்துரைகளிலும் 90 வீதமான விடயங்களில் உடன்பாடு காணப்பட்டதை சமூகத்திற்கு கொண்டு செல்ல இந்த விமர்சகர்கள் ஈடுபாடு காட்டவில்லை என்பதே உண்மை.

அது ஒரு புறமிருக்க இரண்டு பரிந்துரைகளிலும் காணப்பட்ட முரண்பாடுகளை சென்ற அரசாங்கத்தின் காலத்திலையே பல முஸ்லிம் அமைப்புக்களுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கௌரவ சட்டத்தரணி சலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் இணைந்து ஒருமித்த கருத்தின் பக்கம் வந்த விடயம் கட்டுரையை எழுதியவருக்கு தெரியவில்லையோ. இந்த உண்மைகளை ஏன் சமூகத்திற்கு கொண்டு செல்வதில்லை. அந்த குழு அப்போதே ஒருமித்த கருத்திற்குள் வந்து விட்டார்கள்.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவைகள் தொடர்பில் இவர் ஏதும் எழுதியதாக காணக் கிடைக்கவில்லை. அதே நேரம் இரண்டு பரிந்துரைகளிலும் குழுவில் உள்ள பலரும் கையொப்பமிட்டிருக்கும் நிலையில் அக்குழுவில் அங்கம் வகித்த ரிஸ்வி மௌலான என ஒருவரை மாத்திரம் அவர் குறிப்பிட்டு விமர்சனம் செய்வது எழுத்தாளரின் எழுத்தில் வேறொரு நோக்கம் இருக்கிறாதா என்ற கேள்வி எழுகின்றது. உண்மையில் பரிந்துரைகளில் பிழையிருப்பின் அவற்றை தலைமைத்துவம் வழங்கி பிரந்துரையை சமர்ப்பித்தவரின் பெயரையை குறிப்பிட்டிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரை இலக்கு வைப்பதற்கும் ரிஸ்வி முப்தி தொடர்பில் இஸ்லாமிய பெயர்களை வைத்து இஸ்லாத்தின் அகீதாவிற்கு வெளிய்ல சென்று  கூலிப்படைகளாக செயற்படுபவர்களின் வேலைக்கும் என்ன வித்தியாசம் இருக்க போகின்றது.

அது தவிர இத்திருத்தம் தொடர்பில் முன்னாள் காழிமார் இணைந்து வழங்கிய அறிக்கைகளின் தொகுப்பை வாசிக்கின்ற போது எவ்வாறான விடயங்களில் உடன்பாடுகள் காணப்படவில்லை. அது சன்மார்க்க விடயங்களில் எவ்வளவு பிரதிபளிக்கின்றன என்ற பல விடயங்களை புரிந்து கொள்ளலாம். அதன் இணைய லிங்கை இங்கே பதிவிடுகின்றேன்.

https://www.dropbox.com/s/rdg9fj26jn0waop/Former%20Quazi%20Report%20tamil.pdf?dl=0

சகோதரர் லதீப் பரூக் அவர்களுக்கு அல்லாஹ் மிகவும் சிறந்த எழுத்தாற்றலை வழங்கியிருக்கின்றான். அந்த அருளை அவர் சமூகத்தின் மேம்பாற்றிட்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உரிய முறையில் பயன்படுத்த வேண்டுமென்பது எனது அவா. 

எனவே விமர்சனங்களை உறிய முறைகளை பேணி செய்வதுடன் வாசகர்களுக்கு கிடைக்கின்ற விடயங்களை வாசகர்கள் ஜாக்கிரதையாக இருந்து உரியவர்களிடம் முறையாக அணுகும் நல்ல பழக்கத்தை நாம் நமக்குள் கொண்டு வருவதுடன் விமர்சனங்களை உரியவர்களிடம் முறையாக செய்யப்ப பழகிக் கொள்ள வேண்டும்.

எழுத்தாளர் பரகத் முஹம்மத்

No comments

Powered by Blogger.