Header Ads



பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 6 மில்லியன் ருபா செலவில் கொம்பியுட்டர் ஆய்வுகூட வசதி


(அஷ்ரப் ஏ சமத்)

 பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாியின் பழைய மாணவிகள் சங்கத்தின்  உப தலைவியான பெரோஸா முஸம்மில் மற்றும் சங்கத்தின் நிர்வாக உஸ்த்தியோகத்தா்களும்  இணைந்து  6 மில்லியன் ருபா செலவில் கல்லுாாியின் உயா்தர மாணவிகளுக்கான ஒரு கனனி தொழில் நுட்ப ஆய்வு கூடமொன்றை  இன்று (05.04.2021 திறந்து வைத்தாா்கள். 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  திருமதி ஷஹரா ஆப்டீன் கலந்து கொண்டு ஆய்வுகூடத்தினை திறந்து வைத்தாா்.  இந் நிகழ்வு கல்லுாாி அதிபா்  நஸ்ரியா முனாஸ் தலைமையில் உயா்தர மாணவிகளது கட்டிடத்தில் நடைபெற்றது.    மற்றும் பிரதி  அதிபா்களும், பழையமாணவிகள் சங்கத்தின்  நிர்வாக உஸ்த்தியோகத்தா்களும் கலந்து கொண்டனா். 

இங்கு உரையாற்றிய கல்லுாாி அதிபா் இக் கல்லுாாியின் வளா்ச்சிக்கு பழையமாணவிகள் பெரிதும் உதவி வருகின்றனா். கொழும்பு மாவட்டத்தில் மட்டுமல்ல மேல் மாகணத்திலும் இருந்தும் 3500 க்கும் மேற்பட்ட  மாணவிகளை கொண்டதும் மும் மொழிகளிலும் கல்வி போதிக்கும்  ஒரே ஒர்  முஸ்லிம் பெண்கள் பாடசாலை கொழும்பு முஸ்லிம் மகளிா் கல்லுாாியாகும்.. அத்துடன்  தலைநகரில் உள்ள முஸ்லிம் மகளிர்களுக்கென உள்ள ஒரு  தேசிய பாடசாலையாகும். , உயா் தரத்தில் கனனி பாடத்தில் மும் மொழிகளிலும் உள்ள மாணவிகள் 160க்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கு கனனியை பாடமாகப் கற்கின்றனா். அத்துடன் பரீட்சைத் திணைக்களமும் உயா் தர கனனி பாடத்தில் செய்கைமுறை நிலையமாக இக் கல்லுாாியின் கனனி ஆய்வு கூடத்தினை பயன்படுத்தி வருகின்றது.   கடந்த கால கொவிட் 19 பிறகு கடந்த மாதங்களாக இப் பாடசாலை எவ்வித தடங்களுமின்றி செயற்பட்டு வருகின்றது. அத்துடன் இக் கல்லுாாிக்கு கனனி நிலையம் மற்றும் கல்வி அபிவிருத்திகளுக்கு பெரோஸா முசம்மில் மற்றும் உஸ்த்தியோகத்தர்கள் நலன்விரும்பிகள் கல்வி அபிவிருத்திக்கு  உதவிவருவதை இப் பாடசாலை கல்விச் சமுகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. எனவும்  அதிபா் அங்கு தெரவித்தாா். 





No comments

Powered by Blogger.