Header Ads



நுவரெலியாவின் அழகை 5 நிமிடங்கள் ஹெலிகெப்டரில், சுற்றிப்பார்க்க 15,700 ரூபாய் அறவீடு


- ஆ.ரமேஸ் -

வானிலிருந்து நுவரெலியாவின் அழகை ஐந்து நிமிடங்கள் ஹெலிகெப்டரில் சுற்றிப்பார்க்க, 15,700 ரூபாய் உல்லாசப்பயணிகளிடம் அறவிடப்படுகிறது.

நுவரெலியாவில் ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் கலைகட்டியுள்ள நிலையில்,நுவரெலியாவின் அழகை வானிலிருந்து கண்டுமகிழ, நுவரெலியாவில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்று இரண்டு ஹெலிகெப்டர்களை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளது.

ஒரு ஹெலிகெப்டரில் அறுவர் பணிக்கக் கூடிய வகையில், ஐந்து  நிமிடங்களுக்கு ஒருமுறை பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் ஹெலிகெப்டரில் ஒரு பயணியிடம் 15700/=ரூபாய் பயணக்கட்டணமாக அறவிடப்படுகிறது.

அந்த வகையில் அறுவர் கொண்ட குழு ஒருமுறை பயணிக்க 94,200 ரூபாய் அறவிடப்படுகிறது.

காலை 09 மணியலவில் ஆரம்பிக்கப்படும் இந்த சேவை மாலை வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நுவரெலியா கிறேகறி தெப்பக்குள பகுதியில் ஆரம்பமாகும் இச்சேவை நுவரெலியா நகர்,பிதறுதலாகலை மலைசிகரம் ,மற்றும் அம்பேவெல பகுதிவரை ஐந்து நிமிடம் ஒருமுறை வட்டமிட்டு வந்திறங்கவே இந்த தொகை அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.