Header Ads



எதிர்வரும் 3 வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை, மக்களின செயலினால் மீண்டும் கொரொனா வேகமாகப் பரவும் ஆபத்து


எதிர்வரும் 3 வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக மக்கள் செயற்பட்ட விதத்தால், நாட்டில் மீண்டும் கொரொனா வேகமாகப் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ​அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தொடர்ச்சியான விடுமுறைகளைக் கொண்ட வார இறுதி நாள்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என்பவற்றை ஏற்பாடு செய்வதையும் தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.