Header Ads



ஈஸ்டர் தாக்குதலுக்கு 2 வருடம், இஸ்லாமியர்களும் பங்கேற்ற பாதயாத்திரை - நீர்கொழும்பில் நடைபெற்றது


- Ismathul Rahuman -

நீர்கொழும்பு நிருபர் உயிர்த்த ஞாயிறு மிலேச்ச தாக்குதலின் இரண்டு வருட நிணைவாக இன்று 21ம் திகதி நீர்கொழும்பில் பாதயாத்திரை இடம்பெற்றது. நீர்கொழும்பு மாரிஸ்டலா கல்லூரி வளவிலிருந்து மாலை 4.30 மணியலவில் பாதயாத்திரை ஆரம்பித்து கட்டுவபிட்டிய தேவஸ்தானத்தை நோக்கி ஊர்வலம் சென்றது. பேராயர் காதினல் மல்கம் ரன்ஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப் பாதயாத்திரையில் பெளத்த, இந்து, இஸ்லாமிய மதத் தலைவர்களும், நாட்டின் நாலா பகுதிக லிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணககான ஆயர்கள், கத்தோலிக்க பிதாக்கள்,கண்ணியஸ்திரிகள் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின் முதலில் காதினல் உற்பட சகலமதத் தலைவர்களும் அதன்பின் மிலேச்ச குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு கட்டுவபிட்டிய சாந்த செபஸ்தியன் தேவஸ்தானம்,கொச்சிகடை அந்தோனியார் தேவஸ்தானம், மட்டக்களப்பு சியோன் தேவஸ்தானம்,  உல்லாச விடுதிகள் ஆகியவற்றில் உயிர்நீத்தவர்கள் நிணைவாக அதன் பதாகைகளின் கீழ் கத்தோலிக்க மதகுருமார் பயணித்தனர். ஊர்வலம் செல்லும் வீதிகளில் பொலிஸ் இரானுவ பலத்த பாதுகாப்புக்கும் கத்தோலிக்க சபையின் தனிப்பட்ட பாதுகாப்புக்கும் மத்தியில் அமைதியான முறையில் பாத யாத்திரை இடம் பெற்றது. பாத யாத்திரை ஆரம்பிபதற்கு முன்னர் மதத் தலைவர்களின் ஆசீரவாதம் நடைபெற்றதுடன் மிலேச்ச தாக்குதலின் உண்மை சூத்திரதாரிகளை வெளிப்படுத்தக் கோரி ஆராதனையும் நடந்தது.



No comments

Powered by Blogger.