Header Ads



ஏப்ரல் 21 தாக்குதல் பற்றி கலந்துரையாட, கத்தோலிக்க ஆயர்களிடம் சந்தர்ப்பம் கேட்டு கடிதம்


ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் தமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் பற்றி கலந்துரையாடுவதற்காக நாள் ஒன்றை ஒதுக்குமாறு கோரி எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியால் நாடாளுமன்றிலும் அதன் வெளியிலும் ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து வெளிப்படுத்திய முக்கியமான விடயங்கள் தொடர்பில் அவதானத்தை செலுத்துமாறும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டுவாபிட்டி புனித செபஸ்டியன் தேவாயலத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் மனைவியான சாரா, இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில், தாக்குதலின் மூல காரணத்தினை அறிவதற்கு அவரின் சாட்சியம் முக்கியம் என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த விடயம் உள்ளிட்ட சில தகவல்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பும் போது, அரசாங்கம், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

எனவே இந்த விடயங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பிலான முக்கிய தகவல்கள் குறித்து கலந்துரையாட பொருத்தமான நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கித் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.