Header Ads



பாடசாலை ஆசிரியையுடன் 15 பேர் கைது, மகனின் பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் சப்ளை - சொகுசு வீட்டின் மாடியில் அசிங்கம்


தன்னுடைய மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில், போதைப்பொருள்களை உபசாரம் செய்த சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியை உள்ளிட்ட இளைஞர், யுவதிகள் 15 பேர், போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருளப்பனையிலுள்ள அதிசொகுசு வீட்டின் இரண்டாவது மாடியில் வைத்து, போதைப்பொருள் பயன்படுத்திகொண்டிருந்த போதே, இவர்களை வெள்ளவத்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள், சந்தேகநபரான ஆசிரியையின் இரண்டு மகன்மார்களும் அடங்குகின்றனர்.

இளைஞர் யுவதிகளுடன் ஐஸ் போதைப்பொருள் 15 கிராம், 2450 மில்லிகிராம் கஞ்சா, ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்,யுவதிகள் அந்த வீட்டுக்குவந்து, போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என வெள்ளவத்தைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே, விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

இரண்டுமாடிகளைக் கொண்ட அந்த வீட்டின் மேல்மாடியில், அதி சத்தத்துடன் இசை ஒலிக்கப்பட்டுள்ளது. அதில் பலர் ஆடிக்கொண்டிருந்துள்ளனர். இன்னும் சிலர், அங்கு போதைப்பொருள்களை பயன்படுத்திகொண்டிருந்துள்ளனர்.

போதைப்பொருளை ஏனையோருக்கு பகிர்ந்தளித்துள்ள சந்தேகநபரான அந்த ஆசிரியை, தானும் போதைப்​பொரு​ள் பாவித்துவிட்டு, விநோதமாக இருந்தார், அத்துடன் அவர் அணிந்திருந்த ஆடைகள் உடல் அங்கங்களை காண்பிக்கும் வகையிலும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

42 வயதான அந்த ஆசிரியைக்கு மேலதிகமாக 18 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்படைவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள், ​தெஹிவளை, வௌ்ளவத்தை மற்றும் கொழும்பை அண்​மித்தவர்கள் என்றும் அவ​ர்களை அனைவரும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

1 comment:

  1. இஸ்ரேல் இன் டெக்னிக் இலங்கையில் நல்லா வேலை செய்து வருகின்றது

    ReplyDelete

Powered by Blogger.