Header Ads



மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும், வெளியேறும் முக்கிய 12 இடங்களில் கொரோனா பரிசோதனை


மேல் மாகாணத்தை விட்டு வெளியேறக்கூடிய முக்கிய பகுதிகளில் கோவிட் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

 பிரவேசிப்போர் மற்றும் வெளியேறுவோருக்கு இவ்வாறு எழுமாறான அடிப்படையில் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.

மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் பயன்படுத்தப்படும் முக்கிய 12 இடங்களில் இந்தப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

முப்படையினரும், சுகாதார அதிகாரிகளும் இணைந்து இந்த பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளனர்.

கொச்சிகடை, கொட்டாதெனியாவ, நிட்டம்புவ, கிரியுல்ல, சமன்பெத்த, ஹங்வெல்ல, அலுத்கம, தினியாவல, இங்கிரிய, பதுருளிய, மீகாதென்ன, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபன்ன நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் இந்த விசேட கொவிட் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

மாகாணத்திற்குள் பிரவேசிப்போர் மற்றும் வெளியேறும் நபர்களுக்கு விசேட என்டிஜன் பரிசோதனை எழுமாறான அடிப்படையில் நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.