April 09, 2021

11 முஸ்லிம் அமைப்புகள் மீது தடை - நீதிமன்றத்தை நாடுவதற்கு திட்டம்


அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாக கூறப்­படும் 11 இஸ்­லா­மிய அமைப்­பு­களை தடை செய்­யு­மாறு சட்­டமா அதிபர் தப்­புல டி லிவேரா ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக சட்­டமா அதி­பரின் திணைக்­களம் தெரி­வித்­துள்ள நிலையில், குறித்த தடையை சட்ட ரீதி­யாக எதிர்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை சம்­பந்­தப்­பட்ட அமைப்­புகள் மேற்­கொண்டு வரு­வ­தாக அறிய முடி­கி­றது.

ஐக்­கிய தவ்ஹீத் ஜமாஅத் (UTJ), சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ), ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (ACTJ), பர­க­ஹ­தெ­னி­யவில் தலை­மை­ய­கத்தைக் கொண்டு இயங்கும் ஜம்­இய்­யதுல் அன்­சாரிஸ் சுன்­னதுல் முஹம்­ம­தியா (JASM), காத்­தான்­கு­டியில் இயங்கும் தாருல் அதர் அத்­த­அ­விய்யா அல்­லது ஜாமிஉல் அதர், ஜமா­அதே இஸ்­லா­மியின் மாணவர் அமைப்­பான ஸ்ரீ லங்கா இஸ்­லா­மிய மாணவர் அமைப்பு (SLISM), சர்­வ­தேச தீவி­ர­வாத அமைப்­பு­க­ளான ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல் கைதா, தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுடன் தொடர்­பு­டைய சேவ் த பேர்ல்ஸ் மற்றும் அண்மைக் கால­மாக சர்ச்­சைக்­கு­ரிய கொள்­கை­களைப் பரப்பி வரும் சுப்பர் முஸ்லிம் ஆகிய அமைப்­புக்­க­ளுக்கே தடை விதிக்க சட்ட மா அதிபர் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக நேற்று முன்­தினம் சட்ட மாஅ­திபர் திணைக்­க­ளத்தின் இணைப்பு அதி­காரி, அரச சட்­டத்­த­ரணி நிஷார ஜய­ரத்ன தெரி­வித்­தி­ருந்தார்..

இந் நிலையில் சில தவ்ஹீத் அமைப்­பு­களும் ஸ்ரீ லங்கா இஸ்­லா­மிய மாணவர் அமைப்பும் தத்­த­மது சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் இத் தடையை சட்ட ரீதி­யாக எதிர்­கொள்­வ­தற்­கான ஆலோ­ச­னை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

இந்த விவ­காரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத், அநி­யாய தடைக்கு எதி­ராக சட்ட ரீதியில் நீதி­மன்­றத்தை நாட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் கோரிக்­கைக்கு இணங்க இலங்­கையில் 11 அமைப்­பு­களை தடை­செய்­வ­தற்கு சட்­டமா அதிபர் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக சட்­டமா அதிபர் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அவற்றில் 06 தவ்ஹீத் அமைப்­புகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு கடந்த 15 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இலங்­கையில் ஏகத்­துவ பிரச்­சாரம் மற்றும் சமூகப் பணி­களை முன்­னெ­டுத்து நாட்டின் இறை­யாண்­மைக்கு உட்­பட்டு ஜன­நா­யக ரீதியில் செயல்­படும் அமைப்­பாகும்.

தீவி­ர­வாத, பயங்­க­ர­வாத சிந்­த­னை­க­ளுக்கு எதி­ராக நாட­ளா­விய ரீதியில் பகி­ரங்­க­மாக செயல்­ப­டு­வ­துடன், தற்­கொலை தாக்­கு­தலின் முக்­கிய குற்­ற­வாளி ஸஹ்ரான் ஹாஷிம் குறித்த முக்­கிய தகவல் உட்­பட பல்­வேறு விட­யங்­களில் குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் வழங்கி நாட்டின் தேசிய பாது­காப்பு குறித்து அக்­க­றை­யுடன் செயல்­பட்ட ஓர் அமைப்­பாகும்.

இவ்­வா­றான நிலையில் நாட்டின் தேசிய பாது­காப்பு குறித்து அக்­க­றை­யு­டனும் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக 100 வீதம் ஜன­நா­யக விழு­மி­யங்­களை கடைப்­பி­டித்து இயங்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உட்­பட தவ்ஹீத் அமைப்­பு­களை தடை செய்ய எத்­த­னிப்­பது ஜன­நா­யக விழு­மி­யங்­களை மீறும் செய­லாகும்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா­அத்தை பொறுத்த வரையில் ஜன­நா­யக வழியில் சட்­டத்­திற்கு கட்­டுப்­பட்டு ஏகத்­துவ பிரச்­சாரம் மற்றும் சமூக பணி­களை முன்­னெ­டுக்கும் அமைப்பு என்­கின்ற அடிப்­ப­டையில் சட்ட ரீதியில் ஜன­நா­யக வழி­மு­றை­களை கையாண்டு நீதியை பெற்றுக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ)

அநி­யா­ய­மாக தடை விதித்தால் சட்­டத்­திற்கு முன் நீதி மன்­றத்தில் நியாயம் கேட்போம் என சிலோன் தௌஹீத் ஜமாஅத் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

மாபெரும் அழி­வொன்று நடக்க இருக்­கி­றது என்று போதிய தக­வல்­களை உட­ன­டி­யாக பாது­காப்புத் துறைக்கு வழங்­கிய CTJ உள்­ளிட்ட தவ்ஹீத் அமைப்­பு­களை தடை செய்­ய­வுள்­ள­தாக கூறு­வது நீதியின் பெயரால் அநீ­தியை நிலை­நாட்ட முனை­வ­தாகும்.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் என்­பது ஜன­நா­யக ரீதியில் மக்கள் மத்­தியில் பகி­ரங்­க­மாக இஸ்­லா­மிய பிரச்­சாரம் மற்றும் சமூக பணி­களை முன்­னெ­டுத்து வரக்­கூ­டிய ஓர் அமைப்­பாகும். நாடு முழு­வதும் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­கவும், தீவி­ர­வா­தத்தை அடி­யோடு இல்­லா­ம­லாக்­கவும் தொடர்ந்து பாடு­படும் ஓர் வெளிப்­படைத் தன்மை கொண்ட ஜன­நா­யக அமைப்­பாகும்.

எல்­லா­வற்­றுக்கும் மேலாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் என்­பது, 04/21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லுக்கு முன்­ப­தா­கவே பாது­காப்புத் துறை­யுடன் ஒத்­து­ழைப்பு வழங்கி ஸஹ்ரான் ஹாஷிமின் பயங்­க­ர­வாத செயல்­பா­டுகள் தொடர்பில் தக­வல்­களை வழங்கி பாது­காப்பு தரப்­புக்கு பூரண ஒத்­து­ழைப்பை வழங்­கிய ஓர் இயக்­க­மாகும்.

நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ தீவி­ர­வா­தத்தில் தொடர்பு கொண்­டுள்ள அமைப்­பு­களை தடை செய்­வதில் எமக்கு எவ்­வித ஆட்­சே­ப­னையும் இல்லை. ஆனாலும், தீவி­ர­வா­தத்­திற்கு நேர் எதி­ராக செயல்­பட்ட அமைப்­பு­களை தடை செய்­வ­தென்­பது ஜன­நா­யக விரோத செயல்­பா­டாகும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­போன்று ஜமா­அதே இஸ்­லா­மியின் மாணவர் அமைப்­பான ஸ்ரீ லங்கா இஸ்­லா­மிய மாணவர் அமைப்பும் குறித்த தடை பற்றி சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு ஆலோ­சித்து வரு­வ­தாக அறிய முடி­கி­றது.

தடை செய்ய புதிய சட்டம் வேண்டும் : சட்­டத்­த­ரணி

‘‘ நாட்டில் இயங்கும் அமைப்­பு­களை இவ்­வாறு எடுத்த எடுப்பில் தடை செய்ய முடி­யாது. அதற்­கென பாரா­ளு­மன்­றத்தில் சட்டம் இயற்­றப்­பட வேண்டும். விடு­தலைப் புலி­களை தடை செய்­வ­தற்­கென பாரா­ளு­மன்­றத்தில் விசேட சட்டம் இயற்றப்பட்டது. அதேபோன்று முஸ்லிம் அமைப்புகள் மீதான தடையை செயற்படுத்த சட்டம் இயற்றப்பட வேண்டும். இதுவரை இத் தடை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரின் ஆலோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த தடை தொடர்பில் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்த முடியும். என்னைப் பொறுத்தவரை கத்தோலிக்க மக்களைத் திருப்திப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது’’ என சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.-

நன்றி  Vidivelli

0 கருத்துரைகள்:

Post a Comment