March 24, 2021

மனித உரிமைகளை மீறுகின்றமையே ஐ.நா. தீர்மானம் நிறைவேற்ற காரணமாகும் - SJB


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று -24- அறிக்கையொன்றை விடுத்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் பலவீனமே இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட காரணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய வௌிநாட்டுக் கொள்கை இல்லாமை, அரசாங்கம் மனித உரிமைகளை மீறுகின்றமை மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a comment