Header Ads



சுனாமி பேபி இன்று, O/L பரீட்சை எழுதுகிறார்


உலகத்தையே தன்பால் ஈர்த்த “சுனாமி பேபி” எனப்படும் சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாஸ்,  இன்று (01) க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் தற்போது வசித்துவரும் சுனாமி பேபி அபிலாஸ், செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் மிகவும் உற்சாகத்துடன் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றினார்.

தனது பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் கோவில் வழிபாட்டை பூர்த்திசெய்து தான் பரீட்சைக்கு தோற்றுவதாக அவர் தெரிவித்தார்.

சுனாமி அனர்த்ததின்போது கண்டெடுக்கப்பட்ட அபிலாஸ், தனது குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக நடைபெற்ற பரீட்சையில் சித்திபெற்றதைப் போன்று, இப்பரீட்சையிலும் அவர் களமிறங்கியுள்ளார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்





1 comment:

  1. வாழ்த்துக்கள் பல. பரீட்சைகள் அனைத்திலும வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.