March 30, 2021

முஸ்லிம் பொலிஸ்காரரே தாக்கினார் என, இன ரீதியாக பகிரங்கப்படுத்திய மனோ Mp - இது நியாயமா..?


- Mano Ganesan -

<“நடந்தது என்ன? நடப்பது என்ன?” என சற்று முன் நான் வினவியபோது “இதுதான் நடந்தது, நடக்கின்றது ஐயா” என மஹரகமை பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) பிரதம ஆய்வாளர் (Chief Inspector) ஜனகாந்த எனக்கு சொன்னார்> 

மஹரகமை நகர வீதியில் லொறியை ஓட்டி வந்த ஹப்புதளையை சேர்ந்த கலைமகன் பிரவீன், அவ்வீதியில் பணியில் இருந்த மஹரகமை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் ஆய்வாளர் (IP) மைத்திரிபாலவின் மீது மோதி உள்ளார். 

அதனால் ஆத்திரமடைந்த அங்கே பணியில் இருந்த இன்னொரு போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீன், லொறி சாரதி கலைமகன் பிரவீனை சராமாரியாக தாக்கியுள்ளார். 

அந்த காணொளிதான் உலகம் முழுக்க (Viral) தெறிக்கிறது. 

லொறி மோதலில் காயமடைந்த IP மைத்திரிபால இப்போது களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீனும், பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய கலைமகன் பிரவீனும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் மஹரகமை பொலிசாரினால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள். 

இந்த சம்பவத்தை நாம் சரியாக புரிந்துக்கொண்டு இந்த பிரச்சினையை தேவையற்ற இடத்துக்கு கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும். 

இத்தகைய பொலிஸ் அத்துமீறல் சம்பவங்களில், பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படல் அவசியம் என்பது ஒரு சர்வதேச நியதி. அதுதான் அவர்களை அடையாளத்துடன் பொறுப்பு கூற வைக்கும். 

இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பொலிஸ் என்று கிடையாது. ஒரே இலங்கை பொலிஸ்தான் உள்ளது. ஒருவேளை பணியில் ஒரு தமிழ் பொலிஸ்காரர் இருந்திருந்தாலும் இப்படிதான் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இலங்கை பொலிஸ் சீருடையை அணிந்தாலே எல்லோருக்கும் இந்த அத்துமீறல் போக்கு ஏற்படுகிறது. அவரது வார்த்தை பிரயோகமும் பிழை. 

தங்களது பெரும்பான்மை இன பொலிஸ் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க சிறுபான்மை இன இலங்கை போலீசார், “ஓவராக” நடந்துக்கொள்வதை இதுபோன்ற பல இடங்களில் தமிழ் பேசும் மக்கள் பார்த்துள்ளோம். 

இனி என்ன நடக்கும் என கண்காணிக்க வேண்டும்

12 கருத்துரைகள்:

சிங்கள இன்னவாதி விமல் வீராவஙசையை நம்பலாம் ஆனால் இவனை மட்டும் துளியலவும் நம்ப முடியாது. இவன் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எவ்வளவு வெளிப்படையாக செய்யற்பட்டான் ஆனால் முட்டாள் சோனி இவனுக்கும் இவனுடைய கட்சியிலிருக்கும் வேலுகுமாருக்கும் வாகளித்த தோற்க இருந்தவர்களை காப்பாற்றினார்கள் முஸ்லிம்கள் என்று தான் எதார்த்ததை புரிந்துகொள்வார்களோ...

யாராக இருந்தாலும் தாக்கிய பொலிஸ் அதிகாரியை சட்டப்படி தண்டிக்க வேண்டும் .

சமீப காலமாக பெரும்பான்மையினரை திருப்திப்படுத்தவென்று எமது மார்க்கத்தலைவர்கள் கூட சில முப்திகள் உற்பட ஓவரெக்டிங் காட்டுவதை காணலாம்.

முஸ்லிம் என்கிறபடியால்தான் இந்த நியூஸ் பரவுது வேறுயாரும்மாக இருந்தால் வேலேல வரது

Punish them all who attack the Lorry Driver... NO one can take the Law into their hands.
Where is the LAW in the country ???

தோழர் மனோ கணேசன் மிகவும் ஒடுக்கபட்ட ஒரு இனத்தின் நாகரீகமான தலைவர். அவர் தவறு செய்தால் இனவாதம் தொனிக்காமல் நாகரீகமாக கேழ்விகேழுங்கள் விமர்சியுங்கள். இனரீதியாக கொச்சைப் படுத்தும் பதிவுகள் ஜப்னா முஸ்லிம் சஞ்சிகைக்கு அழகல்ல.

சவாஹிர் மொஹம்மட்,உங்கள் கூற்றி தவறு. தாக்கிய பொலிஸ்காரன் முஸ்லிம் இருந்ததால் தப்பினான். அந்த பொலிஸ்காரன் பெரும்பாண்மையினனாக இருதிருப்பின் மனோவும் உலகளாவிய தமிழர்களும் இப்பிரச்சினையை சர்வதேச மனித உரிமைப் பிரச்சினையாக்கியிருப்பார்கள்.

NGK மனோவிடம் விசாரித்தேன். காணொளியை பார்த்தீர்களா? பொலிஸ்காரர் மலையக தமிழ் சாரதியை இனம்கண்டு பற தமிலோ என சொல்லி அடித்திருக்கிறார்.மலையக தலைவரான மனோ முஸ்லிம் என்பதால்மட்டுமே அடக்கி வாசித்திருக்கிறார். மனோவை பாராட்டா விட்டாலும் தயவு செய்து உங்கள் இனவாத பதிவை அகற்றுங்கள். உங்களைப் போன்றவர்களால்தான் முஸ்லிம்கள் தனிமைப்படும் அபாயம் அதிகரிக்குது.

Mr.ஜெயபாலன் :மனோ கணேசன் ஒன்றும் உத்தமன் இல்லை! அவனும் பச்சை இனவாதிதான் பணம் பதவிக்கு மலத்தையும் தின்பான் ஒடுக்க பட்ட இனத்தின் தலைவர் என்று பீத்துறீங்க அரபு மொழி இலங்கை நாட்டுக்கு எக்காரணம் கொண்டும் தேவை இல்லை என்று அரச கரும மொழிகள் அமைச்சராக இருக்கும் போது சொன்னானே?அப்போ நீங்க இல்லை!அது உலக முஸ்லிம்கள் ஆதி மொழி இலங்கை முஸ்லிம்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் ஐவேளை தொழுகை புனித குரான் போன்றவயுடன் பின்ன பட்ட மொழி என்று என் உங்களால் சொல்லாமல் போனது?அந்த நேரம் கோமா ல யா இருந்திங்க? நீங்களும் பெரிய புடுங்கி மாதிரி கருத்து சொல்லுவீங்க ஆனால் பாசிச புலிகளால் முஸ்லீம் விரட்டி அடித்த கருப்பு நாள், காத்தான்குடியில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களை சுட்டு கொல்லப்பட்ட நாள் போன்ற கட்டுரைக்கு ஓடி ஒளிந்து இருந்திர்கள்! நீங்க எல்லாம் உள்ளூர் யுத்ததை கரணம் காட்டி பிறந்த நாட்டை விட்டு ஓடி நோர்வே குடியுரிமை பெற்று சொகுசு வாழ்கை வாழ்ந்த கோழை!சும்மா இனம் ,மொழி ,நிலம்,என்று பேய் காட்ட வேண்டாம் !இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குடிமகனின் கோபம்,வெறுப்பு, எந்த அரசாங்கம் அந்த நாட்டை இனவாதமாக ஆட்சி செய்கிறதோ அதட்கு எதிரே தானே ஒழிய ஒருநாளும் பிறந்த நாட்டை எதிர்த்து இல்ல உங்கள மாதுரி இனமே பசி,பைட்டினியால் சாகும் பொழுது நோர்வே ஓடி போய் அங்கு குடியுரிமை பெற்று தமிழ் சினிமாவில் பஞ்சம் பிழைக்குற கோழை இல்லை!நீங்களும் பாசிச புலிகளை மீள் எழுச்சியை எதிர்பார்க்கும் ஒரு புலி உளவாளிதான் உங்க கருத்தையெல்லாம் பதிவு செய்வதட்கு இந்த கேடு கெட்ட ஜப்னா முஸ்லீம் எ தவிர எதுவும் இல்ல!

Rowthiram அடவடிதனமாக பேச வேண்டாம். நான் யாருக்கும் அஞ்சுகிறவனல்ல. குறித்த விடயத்தில் பொலிஸ்காரர் பறதமிழன் என்று இனவாதம் பேசியபின்னும் மனோகணேசன் தனது அறிக்கையில் அதனை வெளியிரவில்லை. பறத்தெமிளு என பொலிஸ் அடித்த விவகாரம் சர்வதேஅ மட்டத்தில் பேசபடக்கூடாது என்பதற்காக சிங்கள பொலிஸ் அதிகாரி அவசரம் அவசரமாக அவரது முஸ்லிம் பெயரை பெயரை வெளிட்டனர். முஸ்லிம்தரப்பின் இருந்து வருத்தம் தெரிவிக்கபடாத நிலையில் மலைய தலைவர் தன் கவலையை வெளியிடும்போது பறத்தமிழன் என்றதை குறிப்பிடவில்லை. பொலிஸ்திணைக்களம் வெளியிட்ட பெயரை மட்டுமே மேற்கோள் காட்டினார். Rowthiram உங்கள் பிரச்சினை என்ன? உங்களைப்போன்றவர்களது வார்த்தைகள் முஸ்லிம்களுக்கு நன்மைதரும் என்று கருதுகிறீர்களா? 1985 அம்பாறைகலவரம் காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் ஈஸ்ட்டர் தாக்குதல் என இரு புறத்தும் நாசம் விழைவித்த பாசிசத்தை உங்களால் நெடுந்தூரம் எடுத்துச் செல்ல முடியாது. Rowthiram உங்களபோன்றவர்களின் கருத்துக்களை மட்டும் பதிவிடும் தளமாக யப்னா முஸ்லிம்களை கருதவில்லை. 1979 களில் இருந்தே எழுதுகிறேன். முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்துக்கு என் எழுத்துகள் தன்னை தூண்டியதாக தோழர் அஸ்ரப் பவுசார் (லண்டன்) போன்ற பலரிடம் கூறியிருக்கிறார். Rowthiram உங்களைப்போல புனைபெயருள் ஒளிந்துகொண்டு அவதூறு பேசுகிறவனல்ல நான். இந்த ஈஸ்ட்டர் பின் நாளில் எனக்கெதரான தாக்குதலை நடத்துகிறீர்கள். என் பதிவுகளை வெளியிடுவதற்காக ஜப்னா முஸ்லிமை தாக்க வேண்டாம். நான் எழுதுவதை ஜப்னா முஸ்லிம் விரும்பாவிட்டால் இந்த பதிவை வெளியிட வேண்டாம்.வெளியிடாவிட்டால் நானும் புரிந்துகொண்டு ஒதுங்கிவிடுகிறேன். உங்கள் போக்குத்தான் முஸ்லிம்களுக்கு நன்மைசெய்யுமானால் எனக்கும் மகிழ்ச்சியே.

Rowthiram என்கிற புனைபெயருள் ஒளிந்துகொண்டு மஞ்சள் பத்திரிகை தனமாக பொயான தனிமனித தாக்குதலில் ஒரு இனவெறியன் எழுதும் கருத்துக்களை யப்னா முஸ்லிம் ஏற்றுக்கொள்ளுதா? இப்படி தனிமனித இனவெறி தாக்குதலை பதிவிடுவதை விட எழுதவேண்டாம் என என்னிடம் கூறியிருக்கலாமே. நான் வீரனா கோழையா என்பதுபற்றி சொந்தபெயரில் எழுதவே அஞ்சும் ஒருவர் சொல்வது ஆச்சர்யமாக இருக்கு. நான் என் மண்ணின் விடுதலைக்கும் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கும் தொடர்ந்து பணிபுரிகிறேன்.

அண்மைக்காலமாக போலீஸ் காரன் செய்யும் மட்டமான செயலால் போலீசுக்குக்கே தலைகுனிவு எந்த மதமாக இருந்தாலும் போலீஸ்காரன் செய்தது தண்டிக்கப்பவேண்டிய மாபெரும் தவறு சட்டத்தை பாதுகாப்பவன் சட்டத்தை கையில் எடுத்தது கண்டிக்க மட்டுமல்ல தண்டிக்கவேண்டியது , முஸ்லீம் என்றால் முன்மாதிரியாக இருக்கவேண்டும் , உலமாக்கள் முதல் பாமரன் வரை முஸ்லிம்கள் சிலர் இப்படி நடந்து கொள்வதால் சமூகமே கேலிக்குரியதாகி வருகிறது , இதனால் முஸ்லிம்கள் கவலை அடைகின்றோம்

Post a comment