Header Ads



Mp களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் ஆடம்பர சலுகைகள் (முழு விபரம் இணைப்பு)


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி தொடர்பான நன்மைகள், சேவைகள் மற்றும் வசதிகள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு மாத உதவித்தொகையாக ரூபா 54,285 மற்றும் அலுவலகத்தை பராமரிக்க ரூபா 100,000 என்ற மாத கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஒரு நாளைக்கு ரூபா 2,500 கொடுப்பனவு மற்றும் அமர்வு இல்லாத நாட்களில் குழுக்கூட்டம் நடைபெறும் போது நாள் ஒன்றுக்கு ரூபா 2,500 வழங்கப்படுகிறது

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அஞ்சல் வசதிகளுக்காக ஆண்டுக்கு ரூபா.350,000 வழங்கப்படுகிறது என்றும், காலாண்டுக்கு ரூபா 87,500 செலுத்தப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிலம் மற்றும் தொலைபேசிகளுக்கு மாதாந்தம் ரூபா.50,000 கொடுப்பனவு வழங்கப்படுகிறது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தகவல் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு விலை விபரங்களை வழங்கிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்,பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூபா.200 விலையில் உணவு வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமர்வுக்கு வரும் நாள் ஒன்றில் அதிகபட்சம் பன்னிரண்டு பார்வையாளர்களை உணவகத்துக்கு அழைத்து வர முடியும்.எரிபொருள் கொடுப்பனவைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் மாவட்டத்துக்க்கான தூரத்தின் அடிப்படையில் இந்த தொகை செலுத்தப்படுகிறது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு மாதம் 289.94 லீட்டர் டீசல் மற்றும் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 344.58 லீட்டர் அடிப்படையில் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்து கொள்வதற்காக ஒரு நாளைக்கு ரூபா 2,500 என்ற அடிப்படையில் தனிப்பட்ட வாகன ஓட்டுநர் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்கத்திடமிருந்து ஓட்டுநர் வழங்கப்படாவிட்டால், ரூபா 3,500 மற்றும் ரூபா 1,000 கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினரின் போக்குவரத்து செலவுகளை ஈடு செய்ய அதிகபட்சம் நான்கு தனிப்பட்ட பணியாட்களுக்கு ரூ .10,000 என்ற தனி மாதாந்த போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுகிறது என்றும் நாடாளுமன்ற உதவிச்செயலாளர் ரிக்கிரி ஜெயதிலக்க பதில் வழங்கியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.