Header Ads



அசாத் சாலி கைது வெற்றியளிக்காததால், மாடறுப்பு தடையை கையில் எடுத்திருக்கிறார்கள் - இம்ரான் Mp


ஜனாதிபதியிடம் மக்கள் பிரச்சினைகளை கூறும் காலம் போய் ஜனாதிபதி தனது பிரச்சினைகளை மக்களிடம்  கூறும் காலம் வந்துவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். 

கிண்ணியாவில் புதன்கிழமை காலை -31- இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

தங்களை புலி குட்டிகளாக பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று மக்கள் முன்  பூனை குட்டிகளாக மாறிவிட்டது.சீனி ஊழலை பற்றி பேசி முடிவத்துக்குள் கலப்பட தேங்காய் எண்ணெயுடன் வந்துவிட்டனர்.

இன்று உள்ள பொருளாதார நெருக்கடிக்குள் கடன்பட்டே மக்கள் இரண்டு  வேளையாவது உண்கின்றனர். அவ்வாறு கடன்பட்டு உண்ணும் மக்களுக்கு விஷம் கலந்த உணவையே இந்த அரசு வழங்குகிறது.

இந்த விஷ  உணவுகளை ஜனாதிபதி உண்பதில்லை. அதனால் இதன் தாக்கம் அவருக்கு விளங்காது. அவ்வாறு அவர் நோய் வாய்ப்பாடின் சிகிசிச்சைகளுக்காக உடனடியாக சிங்கப்பூர் சென்று விடுவார்.அதிலும் அதிசயம் என்னவென்றால் நல்லாட்சி காலத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் மாதாமாதம் சிங்கப்பூர் சென்றவர்  ஜனாதிபதியானவுடன் ஒருமுறையேனும் சிகிசிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவில்லை. ஜனாதிபதியானால் நோய் தானாக குணமடைந்துவிடுமோ  தெரியாது. 

முன்பெல்லாம் மக்கள் தமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கூறிய காலமிருந்தது. ஆனால் இப்போது ஜனாதிபதி தனது பிரச்சினைகளை மக்களிடம் கூற கிராமங்களுக்கு செல்கிறார். இதனால்தான் நாம் சொல்கிறோம் "சேர் பெய்ல்" இந்த "அரசாங்கம் பெய்ல்" என.

காடழிப்பு, சீனிமோசடி, ஈஸ்ட்டர் தாக்குதல் அறிக்கை , தேங்காய் எண்ணெய் என இந்த அரசு மக்களிடம் இருந்த செல்வாக்கை இழந்துவிட்டது. இத்தகைய சூழலில் மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டால் அரசு நிச்சயம் தோல்வியடையும். அதனால்தான் இதை மறைக்க முஸ்லிம் விரோத செயற்பாடுகளை அரசு முன்னெடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. 

அசாத் சாலி கைது செய்யப்பட்டமை அவர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்காததால் தற்போது மீண்டும் மாடறுப்பு தடையை கையில் எடுத்திருப்பதாக அறிய கிடைக்கிறது என தெரிவித்தார்.

1 comment:

  1. மாடு இங்கஅறுத்தால் தடை வெளிநாட்டில் அறுத்துக் இங்கு கொண்டுவந்தா வியாபாரம் செய்தல் தடைஇல்லை ஹ்ஹஹா என்ன ஒரு கண்டுபுடிப்பு

    ReplyDelete

Powered by Blogger.