Header Ads



பௌத்த அரசாங்கம் என முத்திரை குத்தியதால், ஏனைய சமூகங்கள் சீற்றம் - விஜயதாச Mp


ஆட்சிக்கு வந்த நாள் முதல் தாங்கள் சிங்களபௌத்த அரசாங்கம் என இந்த அரசாங்கம்  முத்திரை குத்திக்கொண்டதால்  அது ஏனைய சமூகங்களின் சீற்றத்தை எதிர்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.  

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் தான் தெரிவு செய்யப்பட்டேன் என ஜனாதிபதி தெரிவிக்கின்றார் தலைவர் ஒருவர் சமூகங்களிற்கு இடையில் பாகுபாட்டை வெளிப்படுத்தினால் ஏனைய சமூகங்கள் என்ன செய்ய முடியும் எனவும் விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்

நாங்கள் இறைமையுள்ள நாடு என தெரிவிக்கின்ற போதிலும் இலங்கையில்இறைமையில்லை என அவர்தெரிவித்துள்ளார்.

உலகின் எந்த நாடும் இறைமையுள்ள நாடு என தெரிவிக்க முடியாது, நாங்கள் இறமையின் கீழ் வரிசையில் நிற்கின்றோம் எங்கள் பொருளாதாரம் செல்லவேண்டிய திசையை சீனா தீர்மானிக்கின்றது நாங்கள் பொருளாதாரத்தில் தப்பிவாழ்தலை இந்தியாவும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும்  தீர்மானிக்கின்றன என தெரிவித்துள்ள அவர் நடைமுறையில் இறைமையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றைய பிரச்சினை அரசாங்கத்திற்கும் சிறுபான்மைகட்சிகளிற்கும் இடையிலானது 2015 இல் சீற்றம்காணப்படவில்லை தற்போது தமிழ் முஸ்லீம் மக்களும் சிங்கள மக்களில் பெரும்பாலன மக்களும்  அரசாங்கம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்த நாள் முதல் தாங்கள் சிங்களபௌத்த அரசாங்கம் என முத்திரை குத்திக்கொண்ட அரசாங்கம் ஏனைய அனைவரையும் சீற்றத்திற்குள்ளாக்கியது எனவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர்கள் 20வது திருத்தத்தின் மூலம் அதிகாரங்களை பெற்றார்கள் ஆனால் எதனையும் செய்யவில்லை  20வது திருத்தத்தினை நிறைவேற்றிய பின்னர் சூழல் அழிக்கப்பட்டது, சர்வதேச அளவில் நாங்கள் அவமானத்திற்குள்ளானோம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே இந்த அரசாங்கம் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றது,பெரும்பான்மையினத்தவர்களிற்காக மாத்திரம் அரசமைப்பை உருவாக்க முடியாது என்பதை அரசாங்கம் உணரவேண்டும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அறிக்கைகள் காரணமாக சீற்றம் காணப்படுகின்றது-தான் சிங்கள பௌத்த வாக்குகளால் தான் தெரிவு செய்யப்பட்டேன் என ஜனாதிபதி எல்லா இடத்திலும் தெரிவிக்கின்றார் என விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் தான் தெரிவு செய்யப்பட்டேன் எனஜனாதிபதி தெரிவிக்கின்றார் தலைவர் ஒருவர் சமூகங்களிற்கு இடையில் பாகுபாட்டை வெளிப்படுத்தினால் ஏனைய சமூகங்கள் என்ன செய்ய முடியும் எனவும் விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.Thinakkural


1 comment:

  1. Wherever mistakes are found, at first glance we should voluntarily try to improve the mistakes ourselves.

    If we overlook the mistakes thinking that they should not be spoken of and if we willfully remain silent , we tolerate mistakes and in essence, we support it "or" not against them.

    ReplyDelete

Powered by Blogger.