Header Ads



பாகிஸ்தானுக்கு நன்றிகூற திரண்ட அமைச்சர்கள், வரிசையில் நின்று வாழ்த்துச் சொன்னார்கள் (Exclusive)



- M. Anzir -

81 ஆவது பாகிஸ்தான் தேசிய தினம்,  கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று (23.03.2021) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்றுதான் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கைக்கு எதிரான பிரேணை, மீதான வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதில் பிரேரணை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக, பாகிஸ்தான் முழு மூச்சுடன் செயற்பட்டு பிரேணைக்கு எதிராக வாக்களித்தும் இருந்தது.

இந்நிலையில் நேற்று முதன்முதலாக மிக அதிகளவிலான அமைச்சர்கள், ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் பாகிஸ்தானின் தேசிய தின நிகழ்வில் பங்கேற்றனர். இது வழமைக்கு மாற்றமாக காணப்பட்டுள்ளது.

இதன்போது அமைச்சர்கள், ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டாக்குக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.

அவருக்கு கைகொடுத்து வாழ்த்துக் கூறவும், இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக நன்றி கூறவும், பொறுமையாக வரிசையாக காத்தும் நின்றுள்ளனர்.

நேற்றைய நிகழ்வில் பிரதமர் மகிந்தவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வங்கதேசம் சென்று திரும்பிவந்து தனிமையில் இருப்பதால் நிகழ்வில் பங்கேற்கவில்லை.

அதேவேளை எதிர்கட்சி பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களும் , நேற்றைய நிகழ்வில் அதிகளவில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. இதை பார்த்து ஆசியாவின் அசிங்கம் இந்தியாவிற்கு சூ-- எரியுமே...

    ReplyDelete
  2. 'I hate two faced people. It's too hard to decide which face to slap first'-Ashay-

    ReplyDelete

Powered by Blogger.