கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
எனினும், இதுவரையில் எந்தவகையிலான விசேடமான அசௌகரிய நிலைமையும் இந்த தடுப்பூசி செலுத்தலில் ஏற்படவில்லை.
எனவே, எவருக்கேனும் தொற்று ஏற்பட்டால், அது தீவிரமடைந்து மரணத்தை ஏற்படுத்துவதற்கான தாக்கத்தைக் குறைக்கும் தன்மை இந்த தடுப்பூசிக்கு உள்ளது என்பதை பொதுமக்களுக்கு அறியப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நோய் ஏற்படுவதை இயன்றளவு குறைக்கும் தன்மையும் இந்தத் தடுப்பூசிக்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நோய் இருக்கும் வரையில், அபாயம் மிக்க பகுதியாக கொழும்பை குறிப்பிட முடியும்.
எனவே, கொழும்புக்கு வருகைத்தருபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
அத்துடன், கொழும்பிலிருந்து வெளியேறும்போதும், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய செயற்படுவதும் முக்கியமானதாகும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சஙக்த்தின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a comment