Header Ads



வேறு பகுதிகளில் ஜனாஸாக்களை அடக்கும் தேவை இதுவரை இல்லை, ஓட்டமாவடியில் தாராள இடமுண்டு - Dr ஹம்தானி


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் ஜனா­ஸாக்­கள் ஓட்­ட­மா­வடிப் பிர­தே­சத்தில் சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்கள் மற்றும் நிபந்­த­னை­க­ளுக்கு அமைய எது­வித பிரச்­சி­னை­க­ளு­மின்றி நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. இப்­பி­ர­தே­சத்தில் ஜனாஸா நல்­ல­டக்­கத்­துக்­காக 5 ஏக்கர் காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

மக்கள் சுகா­தார வழி­மு­றை­களைப் பேணி கொவிட் 19 தொற்று பர­வா­தி­ருக்க ஒத்­து­ழைப்பு வழங்­கினால் இங்கு ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான தேவை­யேற்­ப­டாது என சுகா­தார அமைச்சின் வைத்­திய தொழி­நுட்ப பணிப்­பா­ளரும் கொவிட் 19 நட­வ­டிக்­கை­க­ளுக்­கான இணைப்­பா­ள­ரு­மான டாக்டர் அன்வர் ஹம்­தானி ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

ஓட்­ட­மா­வ­டியில், கொவிட் 19 தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘இங்கு இன்­று­வரை (செவ்­வாய்க்­கி­ழமை) 46 ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. வைத்­தி­ய­சா­லை­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஜனா­ஸாக்­களும் இதில் உள்­ள­டங்­கு­கின்­றன. தற்­போது அடக்கம் செய்­வ­தற்­காக வைத்­தி­ய­சா­லை­களில் கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளான ஜனா­ஸாக்கள் இல்லை.

ஓட்­ட­மா­வ­டியில் இதற்­கென 5 ஏக்கர் காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கா­ணியில் சுமார் 300 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய முடியும். மக்கள் சுகா­தார வழி­மு­றை­களைப் பேணி வாழப் பழகிக் கொண்டால், கொவிட் 19 பர­வா­தி­ருக்க ஒத்­து­ழைப்பு வழங்­கினால் இங்கும் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான தேவை ஏற்­ப­டாது.

கொவிட் 19 தொற்­றினால் இறப்­ப­வர்­களை அடக்கம் செய்­வ­தற்­கான கோரிக்­கைகள் வேறு மாவட்­டங்­க­ளி­லி­ருந்து இது­வரை எமக்கு கிடைக்­க­வில்லை. அவ்­வாறு கிடைத்தால் அது தொடர்பில் நாம் ஆராய்வோம். ஆனால் தற்­போ­தைக்கு அவ்­வா­றான தேவை இல்லை என்றே நான் நினைக்­கிறேன்.

தற்­போது ஓட்­ட­மா­வ­டியில் ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­படும் பிர­தேசம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வரு­கி­றது. கூடா­ரங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. இப்­ப­குதி மக்கள் இந்தப் பணி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­கி­றார்கள். இங்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை கத்­தோ­லிக்க பெண்­ம­ணி­யொ­ரு­வரின் உடலும் அடக்கம் சம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வருகிறது. கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. இப்பகுதி மக்கள் இந்தப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கத்தோலிக்க பெண்மணியொருவரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது’ என்றார். – Vidivelli

1 comment:


  1. What a lot of CRAP from this man, Dr. Hamdani.

    He says that NO Request has been received from any District to Bury the Janazas of Corona Victims in their areas.

    About one month Back, a written Request to the Secretary of the Ministry of Health, Dr. Jasinghe, was made by the Maradana Jummah Mosque to allow Burials in Kuppiyawatte Burial Grounds with a Water Table Test Report by the Dept. of Geology of the University of Peradeniya indicating a depth of 2.5m to 3.0 m which was suitable for Burial.

    The Test Report was neither acknowledged by the Health Authorities nor tabled or discussed at the subsequent Task Force Meeting with President Rajapakse.

    On the 1st of March, the Water Table Report with a copy of the letter to the Health Authorities was handed over to the Prime Minister Mahinda Rajapakse, by the Mosque Authorities urging him to take further action.

    Is this so-called Technical expert from the Health Ministry IGNORANT or is he Deliberately attempting to Mislead the Muslim Community in particular and the country in general?

    ReplyDelete

Powered by Blogger.