Header Ads



அல் குவைதா, தாலிபானுடன் தொடர்பு - இலங்கை அமைப்பு பற்றிய விசாரணைகளை CID ஆரம்பித்துள்ளது


சர்வதேச தீவிரவாத அமைப்புக்களான அக் குவைதா மற்றும் தாலிபான் உள்ளிட்டவைகளுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையின் மற்றுமொரு அமைப்பு பற்றிய விசாரணைகளை புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளது.

இஸ்லாமிக் ரிலிஜ் ஏஜன்ஸி எனப்படும் இந்த அமைப்பு, கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்டு தற்போதும் இயங்கிக் கொண்டிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புலனாய்வுப்பிரிவு நடத்திய விசாரணையில், கட்டார், சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பல்வேறு அமைப்புக்களிடம் இருந்தும் சுமார் 24 கோடி ரூபா நிதி குறித்த அமைப்பிற்குக் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இன்று சனிக்கிழமை -20- வெளியாகிய திவயின பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மீள்பார்வை

1 comment:

  1. இது போன்ற இயக்கங்கள் நாசகாரச் செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அரசாங்கம் இதுபற்றித் தீவிரமாக விசாரித்து அவற்றுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி அது போன்ற எந்த இயக்கங்களும் இந்த நாட்டில் தலைதூக்கவிடாமல் இருக்க பூர்வாங்க ஏற்பாடுகளை உரியமுறையில் மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.