Header Ads



"உடல்களை அடக்கம் செய்ய, உறவினர்கள் முன்கூட்டியே சவப்பெட்டியை வழங்க வேண்டும்"


COVID – 19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம்,

* கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணிக்கும் நிலையில் எவ்வித தாமதமுமின்றி அவரது உறவினர்களுக்கு உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

* வைத்தியசாலையின் பணிப்பாளர் அல்லது அதன் பிரதானியினால், அடக்கம் செய்வது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை உறவினரிடமிருந்து பெறப்பட வேண்டும்

* சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பிரதிநிதி ஒருவரை தொடர்புகொண்டு இறப்பு அத்தாட்சிப் படிவத்தில், அடக்கம் செய்யப்படும் இடத்தை குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்

* சடலத்தை வைத்தியசாலையிலிருந்து கொண்டு செல்லவும் முறையாக அடக்கம் செய்யவும் இந்த குறித்த ஆவணம் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* உறவினர்கள் முன்கூட்டியே ஒரு சவப்பெட்டியை வழங்க வேண்டும்

* சடலத்தை கொண்டு செல்ல முன்னர், தனிப்பட்ட பாதுகாப்பு அங்கி அணிந்த வைத்தியசாலையினால் நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து உறவினர்கள் பார்வையிடுவதற்காக அந்த பகுதிக்கு சடலத்தைக் கொண்டு வர வேண்டும்

* சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கிய வழிகாட்டல்களின்படி, இக் கட்டத்தில் மாத்திரமே மத நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன

* சடலத்தை கொண்டு செல்லும் வாகனத்தின் சாரதி மற்றும் அவர்களுடன் செல்பவர்கள் அனைவரும் பொருத்தமான தனிநபர் பாதுகாப்பு அங்கியை அணிய வேண்டும்

* உரிய சுகாதார நிறுவனம், உறவினர்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத நபர்களால் நிழற்படங்கள், காணொளி மற்றும் வீடியோ அழைப்புகளை எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது

* கொரோனா மரணம் நிகழ்ந்த வைத்தியசாலைக்கு சென்று, இறந்தவரை அடையாளம் கண்ட உறவினர்களில் இருவர், இரணைதீவில் அடக்கம் செய்யப்படுவதை பார்வையிடுவதற்காக மறுநாள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குடா கப்பலில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்

* ஆயினும், குறித்த நபர்கள் COVID – 19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக இருக்கக்கூடாது

* அடக்கம் செய்ய, பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியுடன் இரண்டு உறவினர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளனர்

* சவப்பெட்டி திறக்கப்படக்கூடாது என்பதுடன், உறவினர்கள் / நெருங்கிய உறவினர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் சவப்பெட்டியை கையாள அனுமதிக்கப்படமாட்டார்கள்

No comments

Powered by Blogger.