Header Ads



இலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள மாணவி


இலங்கையில் இறக்குவானை பகுதியைச் சேர்ந்த யுவதியின் சர்ச்சைக்குரிய கருத்து சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்குப்பற்றிய பாக்யா அபேரத்ன என யுவதி குறித்தே இவ்வாறு அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

தனது குடும்பத்தினர் மற்றும் அவரது சொத்துக்கள் குறித்து தனது கிராமவாசிகளிடம் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அந்த யுவதி தெரிவித்தார்.

இறக்குவானையை அண்மித்துள்ள சிங்கராஜ வனப் பகுதியில் இடம்பெற்று வரும் காடழிப்பு குறித்த அந்த நிகழ்ச்சியில் பாக்யா தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அந்த தகவலை அடுத்து, பாக்யா தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

அவர் சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகில் சூழல் மாசடையும் விதத்தில் கட்டுமானப் பணியில் உள்ள ஒரு ஹோட்டல் பற்றி நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் இதுதொடர்பில் பொலிஸார் தனது வீட்டிற்கு வந்து அப்பகுதியில் ஏற்படும் சூழல் மாசடைவு குறித்து விசாரித்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், குறித்த ஹோட்டல் கட்டப்படும் நிலத்தின் உரிமையைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், காலையிலும் மாலையிலும் தான் காணும் சுற்றுச்சூழலின் மாசடைவு குறித்து பொலிஸாரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கராஜ வனம் அருகே கட்டப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் குறித்த நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய கருத்தின் பின்னர், சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. JVP

No comments

Powered by Blogger.