Header Ads



அசாத் சாலியை கைதுசெய்ய அறிவுறுத்தல், ஷரிஆக்கு அமைய செயற்படுவாராயின் சவுதிக்கு செல்ல கோரிக்கை


முஸ்லிம் சட்டத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அஸாத் ஸாலியைக் கைதுசெய்து, விசாரிக்க, குற்றப் புலனாய்வு திணைக்கத்திற்கு தாம் அறிவுறுத்தியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -13- இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய சட்டத்தை எவர் மாற்றியமைத்தாலும் தாங்கள் மாற்றப்போவதில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி கடந்த தினம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவரின் இந்தக் கருத்து தொடர்பில், சில தரப்பினர் இன்றைய தினமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அஸாத் ஸாலியை கட்டாயமாக கைதுசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ள கருத்து, மத அடிப்படைவாதத்துடன் தொடர்புடையதாகும்.

மத அடிப்படைவாதமே இறுதியில் தீவிரவாதத்தை நோக்கிச் செல்லும்.

ஷரியா சட்டத்திற்கு அமைய செயற்படுவாராயின், அவர் சவுதி அரேபியாவுக்கே செல்ல வேண்டும்.

அவருக்கு இலங்கையில் இருக்க முடியாது. இலங்கையில் இருக்க வேண்டுமாயின், இலங்கையின் சட்டத்திற்கு அமையவே அவர் செயற்பட வேண்டும்.

இந்த நிலையில், அடுத்துவரும் சில நாட்களில் அவரை அழைத்து, விசாரணைக்கு உட்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தான் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியதாக சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டத்திற்கு எதிராக அவர் செயற்பட்டிருப்பாராயின், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி, சில ஊடகங்கள் தாம் கூறிய விடயத்திற்கு மாறாக வேறொன்றை கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் சட்டத்திற்கு தாங்கள் மதிப்பளிக்கமாட்டோம் என அஸாத் ஸாலி கூறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, வங்குரோத்தடைந்துள்ள சிலர் கருத்து தெரிவிப்பதாக அஸாத் ஸாலி கூறியுள்ளார்.

2 comments:

  1. who is this culprit, making too much sound, this racist idiot getting too much grave sin

    ReplyDelete
  2. You stupid's, Racists listen to Mr. Asad properly. He did not say anything wrong anything against the country law.

    What about Terror monks they always speaks about minority and against the country law... Where is the action against them???

    Don't look/Listen at thing in racist mind.

    ReplyDelete

Powered by Blogger.