Header Ads



தொழில் இழந்தவர்களுக்கு விசேட அறிவிப்பு


கொவிட் 19 பரவல் நிலையையடுத்து வேலைக்கு செல்லமுடியாதிருந்த  நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்ட   ஊழியர்களின் தகவல்களை திரட்ட தொழில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பணியாற்றிய நிறுவனம், பணியில் இருந்து நீக்கப்பட்ட திகதி, பணியாற்றிய காலம், இறுதியாக பெற்ற சம்பளம் உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கி, தொழில் ஆணையாளர்,  11 ஆவது மாடி, கொழும்பு 15 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விபரங்களை ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டுமென, தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலதிக விபரங்களை அறிய 0112368502 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொள்ளலாம். 

No comments

Powered by Blogger.