Header Ads



ஜனாஸா அடக்கத்துக்கு சொந்த காணியை, இலவசமாக வழங்கத் தயாராக உள்ள சகோதரர்


கொரோனா  தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தாராம்பளை பிரதேசத்தில் உள்ள தனக்கு  சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை வழங்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு கலிமத் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் தலைவரும், அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான ஏ.புஹாது தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 -  தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவர்களின்  உடல்களை  அடக்கம் செய்வற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ள போதும் அடக்கம் செய்வதற்கான நிலங்களை தேர்ந்தெடுப்பதில் பாரிய சிக்கல்கள் நிலவி வருகிறது.

இந்த சிக்கலான சந்தர்ப்பத்தில் கொரோனா காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு பொத்துவில் தாராம்பளை பிரதேசத்தில் உள்ள தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு முன்வந்துள்ளார் - Fuhathu Athambawa.

இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் உடன்படுமிடத்து சமூகத்திற்காக தர்மம் செய்யவுள்ளார்.

- அல்ஹம்துலில்லாஹ் -

Youths TV தமிழ்

1 comment:

  1. He does know these lands are permit land and does not belong to him. Please stop media show

    ReplyDelete

Powered by Blogger.