Header Ads



செல்பி எடுக்கும்போது அதிகாரிகளுக்கு ஏன், சட்டவிரோத காடழிப்பு என்று விளங்கவில்லை


இன்றைய(18) ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஹினி கவிரத்ன தெரிவித்த கருத்துக்கள்.

இன்றைய திவயின மற்றும் அத பத்திரிகைகளை மேற்கோல் காட்டி சுற்றாடல் மற்றும் காடழிப்புகளை வெளிப்படுத்திய அவர்,சௌபாக்கியத்தின் தொலை நோக்கின் ஒன்பதாவது இலக்கில் “நிலைபேறான சுற்றாடல் பாதுகாப்பு” குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இன்று ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வாக்குறுதிகளை கருத்திற் கொள்ளாது சட்ட விரோத காடழிப்புகளை மேற கொண்டு வருவதாக கூறினார்.

நிலைபேறான சுற்றாடல் பாதுகாப்பு என்பதன் அர்த்தம் யானைகளின் வாழ்விடங்களை அழிப்பதும் காடுகளை அழிப்பதுமா என்று கேள்வி எழுப்பினார்.

சுற்றுலாத்துறை சார்ந்த நலன்களுக்கு என்று கூறி மகாவெலி அபிவிருத்தி அதிகார சபையினரால் இன்று உலக மரபுரிமையாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நக்ல்ஸ் வனப்பகுதியின் பிடிவலபத்தன வனத்திற்கேயுரிய உயிரினங்கள் உள்ள இடங்களைக் கூட அழிக்கின்றனர்.இவற்றுக்கு எதிர்ப்பை எங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கூட தெரிவித்தோம்.

இவற்றை தெரிவிக்கும் போது கட்சி சார்ந்து பெயர் முத்திரை பதிக்கின்றனர். சுற்றாடல் பிரச்சிணையைப் பேசுவதற்கு கட்சி தடையா என்று வினவுகிறோம்.

சிங்கராஜ வனப்பகுதியில் இடம் பெறும் காடழிப்பை கண்கலால் கண்ட ஓர் பாடசாலை பிள்ளை அதை வெளிப்படுத்தியதற்காக இன்று எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என்று யாவரும் அறிந்ததே.நக்கில்ஸ் வனப்பகுதியில் இடம் பெறும் காடழிப்பை முறைப்பாடு செய்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு என்ன நடந்துள்ளது என்று யாவரும் அறிந்ததே,சீகிரிய வனப்பகுதியில் இடம் பெறும் காடழிப்பபிற்கு எதிராக குரல் கொடுத்த பண்டா மாமாவை அச்சுறுத்தி தாக்கியுள்ளனர்.இது தான் இன்று இடம் பெறுகிறது.

யுனெஸ்கோ(UNESCO) இலங்கை ஆணைக்குழுவின் செயலாளர் புஞ்சிகேவா மீகஸ்வத்த கூறியுள்ள விடயம் பாரதூரமானது.உலக மரபுரிமையாக பெயர் குறிப்பிட்ட வலயங்களில் மனித தலையீடுகள் முறையற்று இடம் பெறும் எனின் உலக மரபுரிமை அந்தஸ்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித

துள்ளார்.இவ்வாறு அறிவிக்கப்படும் பட்சத்தில் நாட்டிற்கே பாதகமாக அமையும் .அதை அன்டி வாழும் மக்களுக்கு கிடைத்து வரும் பொருளாதார நலன்களும் இல்லாமல் போகும்.அந்த மக்களின் நாளாந்த வருமானம் இழக்கப்படும்.

இன்று புவக்வாப்பிடிய பிரதேசத்தில் வல்லப்ட்ட பகுதி வனம் அழிக்ப்படுகிறது.இவற்றுக்கு முன்னால் இருந்து கொண்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் selfi செல்பி எடுத்த புகைப்படங்களை ஊடகங்களில் காணலாம்.செல்பி எடுக்கும் போது ஏன் அந்த அதுகாரிகளுக்கு இது ஓர் சட்டவிரோத காடழிப்பு என்று விளங்கவில்லை என்றும் ஏன்

 சட்டம் இவர்களுக்கு எதிராக செயற்பட வில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.