Header Ads



இலங்கை மாணவர்களுக்கு அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்துடன் கல்வி பரிமாற்றத் திட்டங்களை வலுப்படுத்த எகிப்து தயார்


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கர், இலங்கையில் உள்ள எகிப்து அரபு குடியரசின் தூதுவர் ஹுசைன் எல் சஹார்டியை(Hussein El Saharty) இன்று -18- சந்தித்தார்.

இலங்கையின் முதல் வரைபடங்களில் ஒன்றை வரைபடமாக்கிய தொலைமி(Ptolemy) போன்ற எகிப்தியர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும்,கொழும்பில் உள்ள சாஹிரா கல்லூரியைத் தொடங்குவதில் ஒராபி பாஷாவின் பங்களிப்பையும் கௌரவ பாக்கிர் மார்க்கர் இதன் போது குறிப்பிட்டார்.

இலங்கை மாணவர்களுக்கு கெய்ரோவில் உள்ள வரலாற்று புகழ் பெற்ற அல்-அஸ்ஹர்  பல்கலைக்கழகத்துடன் பல கல்வித் துறைகளில் கல்வி பரிமாற்றத் திட்டங்களை வலுப்படுத்த எகிப்து தயாராக உள்ளது என்று இதன் போது தூதுவர் உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் 1100 ஆண்டுகள் பழமையான முதல் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயிலான போருவளை மஸ்ஜிதுல் அப்ராரின் ஒரு கட்டமைக்கப்பட்ட படத்தினை தூதுவர் சஹார்டிக்கு பரிசாக வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.