Header Ads



ஐரோப்பாவில் தடைவிதிக்கப்பட்ட தடுப்பூசி, நாட்டிற்கு வரவில்லை - மக்கள் அச்சப்படத் தேவையில்லை


ஐரோப்பாவில் தடைவிதிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியானது நாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று -16-இடம்பெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசியானது எந்த வழியிலேனும் கொண்டு வரப்படவில்லை.

எனவே, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அதிகமானோருக்கு தடுப்பூசிகளை செலுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற தடுப்பூசி தொகையும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தும் பணிகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.