Header Ads



இலங்கையில் புர்கா தடையை தடுக்க தென்னாபிரிக்கா தலையிட வேண்டும் - அந்நாட்டு இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுகோள்


- TL -

இலங்கையில் புர்கா தடைசெய்யப்படுவதை தடுப்பதற்காக தென்னாபிரிக்கா தலையிட வேண்டும் என அந்த நாட்டின் இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இலங்கையில் புர்கா தடைமற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பாடசாலைகள் தடை செய்யப்படுவதை தடுப்பதற்காக தென்னாபிரிக்கா தலையிடவேண்டும் என தென்னாபிரிக்க இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தென்னாபிரிக்காவின் ஐக்கிய உலமா சபை தென்னாபிரிக்காவின் சர்வதேச விவகாரங்களிற்கான அமைச்சரை இந்த விடயத்தில் தலையிடுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளது.

இஸ்லாமியர்கள் குறித்து அரசாங்கத்தின் ஆதரவுடன் பரப்பப்படும் அச்சத்தை தடுத்து நிறுத்துவதற்கு தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகளிற்காக திணைக்களம் தலையிடவேண்டும் என உலமா பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை முஸ்லீம்கள் பிரதான மற்றும் சமூகஊடகங்களில் கடுமையான குரோத பேச்சினை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள உலமா பேரவை புர்கா தடையும் மத்ரசாக்கள் மூடப்படுவதும் பெரும்பான்iயினத்தவர்களை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையே அவர்கள்தங்களை குறுங்குழுவாத மற்றும் பிளவுகளை உருவாக்கும் வெறுப்புபிரச்சாரத்தின் மூலம் வளர்த்துக்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது

1 comment:

  1. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

    (இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோர்த்துக் காட்டினார்கள்.

    அறிவைப்பவர் : அபூமூசா (ரலி),
    நூல் : புகாரி (481)

    ReplyDelete

Powered by Blogger.