Header Ads



ஹிஜாப்பினை தடை செய்யப்போவதில்லை, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை - சரத்வீரசேகர


ஹிஜாப்பினை தடை செய்யும் நோக்கம் எதுவுமில்லை என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஹிஜாப்பினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதால் அதனை தடை செய்யும் நோக்கம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அனுமதி கிடைத்ததும் புர்காவும் நிகாப்பும் தடை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தேவைகள் ஏற்படும்போது பொது இடங்களில் அகற்ற முடியாத நிகாப் புர்கா போன்றவற்றை அனுமதி;க்கும் நோக்கம் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் முகமூடிகள் போன்வற்றை தேவைப்பட்டால் அகற்ற முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. புர்கா நிகாப் மற்றும் குர்ஆன் மதரஸாக்களை மூடுவதன் மூலம் இலங்கையில் உண்மையான ஜனநாயகத்தினை மிளிரச் செய்ய முடியுமாயின் அதற்கு யார் எதிர்ப்புத் தெரிவிக்கப் போகின்றார்கள். முடியாத விடயம் ஒன்றிற்காக நாம் மக்களை வருத்துவதில் எந்தப் பயனும் இல்லை. ஆயினும் இவற்றைத் கையாளுவதனால் நாட்டில் பிறழ்வான சமூகமும் ஒழுங்குபடுத்தப்படாத மக்களும்தான் நிச்சயமாகத் தோன்றுவார்கள் என்பதில்; இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இவை எல்லாம் விவாதத்திற்குரிய விடயங்கள். ஏனைய நாடுகளின் முன்மாதிரிகளைப் பின்பற்றி எமது நாட்டையும் ஜனநாயக வழியில் கொண்டு செல்லவேண்டியது ஆட்சியாளர்கள் மாத்திரமன்றி அறிவுடையோரின் கடமையும் கூட. எல்லோருக்கும் உணவுஇ ஆடைஇ இருப்பிடம் தேவை. சிறுவரகள் மற்றும் பெண்கள் கல்வி மற்றும் போஷாக்குள்ள உணவின்றியும்; குடும்பத் தலைவர்கள் தொழிலின்றியும் வாழ்கின்றனர். இவரகளுடைய பிரச்சினைகளை முதலில் களையப் பாருங்கள். please..

    ReplyDelete
  2. What is use of banning Niqab if a lady use face mask with hijab ? This is not similar to Niqab.

    ReplyDelete

Powered by Blogger.