Header Ads



கொழும்புக்கு செல்பவர்களை, விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை


கொழும்பு நகரத்தின் சனநெரிசல் மிக்கப் பகுதிகளில் போதைக்கு அடிமையான சுமார் 8,000 பேர் சுற்றித் திரிவதால் பயணிகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

புறக்கோட்டை காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். நேற்று முதல் அந்த அறிவிப்பை வெளியிட பல காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி காவல்துறையினர் பேருந்துகளில் ஏறி, பயணிகள் தங்களுக்குச் சொந்தமான உடமைகள் குறித்து கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார்கள்.

போதைக்கு அடிமையானவர்கள் எளிதான பணத்திற்காக மொபைல் போன்கள், பெண்களின் கைப்பைகள், நகைகள் மற்றும் ஆண்கள் பணப்பைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை தேடுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 100,000 ரூபா மதிப்புமிக்க பொருட்கள் திருடிய சம்பவங்கள் குறித்து பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.