Header Ads



பௌத்த அமைப்புகளை தடை செய்யத் தேவையில்லை - பௌத்த, கத்தோலிக்க ஐக்கியம் பாதிக்கப்படும்


பௌத்த அமைப்புகளை தடை செய்யுமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை நிராகரிப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சில பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இது வேடிக்கையில்லை தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.


3 comments:

  1. சாடிக்கேற்ற மூடி

    ReplyDelete
  2. So, you are fingering..? as a top racist!!!1

    ReplyDelete
  3. எந்த சமய அமைப்புகளையும் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சமயங்கள் தோன்றியது மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவே. சமயம் சார்ந்த இயக்கங்களை அதனதன் சமயக் குரவர்கள் நல்வழிப்படுத்த வேண்டும். அவற்றிற்கு அரசும் சமூகமும் உதவ வேண்டும். மக்களுக்கு எவற்றைப் போதிக்க வேண்டும் என்பனபற்றி தெளிவான அறிவை அவரகளுககு ஊட்ட வேண்டும். இந்த மதத்தில் தவறான கருத்துக்கள் உள்ளிடப்பட்டுள்ளன என்று யாராவது நிறுவட்டும் பார்க்கலாம். உலகின் சுமார் 190/195 நாடுகளில் மதங்கள் நல்லிணக்கக் கருத்துக்களைத்தான் மக்கள் மத்தியில் விதைக்கின்றன. ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு, ஆசிய ஐரோப்பிய அவுஸ்த்திரேலிய நாடுகளில் எல்லாம் எமது (இலங்கை) மக்கள் ஏனைய இன மக்களுடன் மிக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தினையும் பேணி வாழுகினறபோது எமது நாட்டில் மட்டும் அது ஏன் சாத்தியப்படுவதில்லை? ஒவ்வொர் இனமும் மற்ற இனத்துடன் எப்போதும் முறுகல் (Conflict) நிலைமையில் இருக்க என்ன காரணம்? இதற்கான பொறுப்பு சமயக் குரவர்களா அல்லது அரசியல் தலையீடுகளா? அல்லது இரண்டுமா? இலங்கையின் புத்திஜீவிகள் என்று சொல்லப்படுவோர் இவற்றை எல்லாம் ஏன் கண்டு கொள்வதில்லை. அவரகளுக்குள் மாத்திரம் ஏன் அமைப்புரீதியான ஒற்றுமையும் தொழிற்பாடும் இல்லை? இவை எல்லாம் இரண்டாம் மூன்றாந்தர புத்திஜீவிகளிடையே காணப்படும் ஆச்சரியமிக்க வினாக்களாகும்.

    ReplyDelete

Powered by Blogger.