Header Ads



ஜனா­ஸா பெட்டிகளே எரிக்கப்பட்டன என்ற நசீரினால் சர்ச்சை, வெட்­கத்­துக்­கு­ரி­ய­து என ஹக்கீம் கண்டனம், தேரர் முறைப்பாடு


‘‘கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்த 181 ஜனா­ஸாக்­களின் பெட்­டிகள் மாத்­தி­ரமே எரிக்­கப்­பட்­டன என்­பதை மாத்­தி­ரமே இப்­போ­தைக்கு என்னால் கூற முடியும். இதற்குள் வெளியில் சொல்ல முடி­யாத நிறைய மறை­மு­க­மான விட­யங்கள் உள்­ளன ’’ என மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நஸீர் அகமட் தெரி­வித்த கருத்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இக் கருத்தை தான் வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாக கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார். பல்­வேறு போராட்­டங்­களின் பின்னர் சர்­வ­தே­சத்தின் தலை­யீட்­டி­னா­லேயே இலங்­கையில் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான உரிமை கிடைக்கப் பெற்­றுள்­ளது. தனது முயற்­சி­யா­லேயே இந்த அனு­மதி கிடைத்­த­தாக நஸீர் அகமட் கூறு­வது வெட்­கத்­துக்­கு­ரி­ய­தாகும். ஜெனீ­வாவில் இந்தப் பிரே­ரணை வந்­தி­ருக்­கா­விடின் ஒரு­போதும் எமது உரி­மைகள் கிடைத்­தி­ராது. அதனால் எனது கட்­சியின் உறுப்­பி­னர்­களின் இவ்­வா­றான கருத்­துக்­களை நான் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன் என கண்­டியில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் கருத்து வெளி­யி­டு­கையில் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

இத­னி­டையே நஸீர் அகமட் எம்.பி.யின் கருத்து தொடர்பில் விசா­ரணை நடத்­து­மாறு கோரி ஜம்­பு­ரே­வல சந்­தி­ர­ரத்ன தேரர் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் நேற்று முன்­தினம் மகஜர் ஒன்றைக் கைய­ளித்­துள்ளார். கொவிட்­டினால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் விட­யத்தில் அர­சி­யல்­வா­திகள் தலை­யீ­டு­வது செய்­வது தவ­றான செயற்­பாடு என்றும் நஸீர் அகமட் தெரி­வித்த மேற்­படி விடயம் தொடர்பில் விசா­ரணை நடாத்­து­மாறு சட்­டமா அதிபர் பொலிஸ் மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட வேண்டும் என்றும் அந்த மக­ஜரில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானாவும் நஸீர் அகமட்டின் கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.- Vidivelli

5 comments:

  1. Don't talk about this idiot. He is a traitor[Drohi Shakkili nai]
    after doing every damage he is trying his bullshit.

    ReplyDelete
  2. இவனுக்கு மாட்டு மூளை என்று மக்கள் பேசிக்கொள்வது சரிதானோ!

    ReplyDelete
  3. தமக்குரிய அரசியல் ஆதாயத்தினைத் தேடுவதற்காக மக்கள் அரசியல்வாதிகளைத் தெரிவு செய்வதில்லை. மக்களுக்கு மக்களால் மக்களுக்காகத் (Democracy is of the people; for the people and by the people) தெரிவு செய்யப்பட்ட இவரகள் மக்கள் விரும்புவனவற்றைச் செய்ய வேண்டும். அப்படியில்லாவிட்டால் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட வேண்டும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் யாரும் அவ்வாறு ஒதுங்கியதாக இல்லை. மக்கள் மத்தியில்த்தான் இன்னமும் புத்திஜீவிகளும் வாழ்ந்து கொண்டிருக்கினறனர். அவர்கள் அரசியல்வாதிகள் பேசுகின்ற பேச்சை கொடுப்புக்குள் நகைத்தவண்ணமே அவதானித்துக் கொண்டிருக்கினறனர். 181 ஜனாசாக்கள் எரிக்கப்படவில்லை பெட்டிகள்தான் எரிக்கப்பட்டன என்றால் அதனுள் இருந்த 181 ஜனாசாக்களுக்கும் என்ன நடந்தது? வானத்திற்கு என்ன பறந்தா சென்றன? சில வேளைகளில் அரசியல்வாதிகள் தமக்குள்ளேயே மக்ளை கோமாளியாக்குவதற்காக நடிக்கின்றனரா என்ற சந்தேகம்கூட ஏற்படுகின்றது. மக்கள் அவ்வாறுதான் எண்ணுகின்றனர். ரணில் விக்கிரமசிங்க ராஜித சேனாரத்ன மற்றும் இன்னும் சிறந்த பல தலைவர்களை தோற்கடித்த நாடும் மக்களும் வாழும் நாடுதான் இலங்கை. அவரகளையே மக்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் என்றால் after-all இவரகள் எம் மக்களுக்கு எம்மாத்திரம்.

    ReplyDelete
  4. What a RIDICULOUS Claim by this MP Naseer Ahmed!!!!

    If ONLY the Boxes were Cremated, will he explain what happened to the Janazas and how they were disposed of?

    ReplyDelete
  5. Gentlmen...நடந்தது நடந்து முடிந்து விட்டது.. இப்போது நீங்கள்கள் எதை கிளறிக்கொண்டிருக்கிறீரகள்? நீங்கள் கிளறுவதால் ஏதாவது நலவுகள் நடக்கப்போகிறதா??? இல்லவே இல்லை...
    இன்னும் ஆமான காரியங்கள் எத்தனையோ இருக்கிறது... இன்னும் திரை மறைவில் எத்தனையோ விடயங்கள் பட்டியலில் கிடக்கிறது.. நீங்கள்கள் குந்தித்தான் பனம்பழம் விழுந்தது... ஏற்றுக்கொள்கிறோம்....
    இப்போது ஏன் அதை கிளறிக்கொண்டிருக்கிறீர்கள்...... ஆம் நீங்கள்கள் குப்பைகளை கிளறி குண்டுமணி தேடும் வேலையை தானே செய்து கொண்டிருக்கிறீர்கள்....

    ReplyDelete

Powered by Blogger.