Header Ads



விமானப்படையின் சாகசக் கண்காட்சி, ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் (படங்கள்)


இலங்கை விமானப்படையின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானப்படையின் சாகசக் கண்காட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (03) பிற்பகல் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமானது.

இந்திய விமானப்படையின் சாரங், சூர்யகிரன் மற்றும் தேஜாஸ் விமானப் படையணிகள் மற்றும் இலங்கை விமானப்படையின் விமானங்கள் இந்த விமான கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி மார்ச் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மாலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

14 இந்திய விமானப்படை ஹெலிகப்டர்கள் மற்றும் ஹாக் (HAWK) ஜெட் விமானங்கள் மற்றும் இலங்கை விமானப்படை ஹெலிகப்டர்கள் செஸ்னா 150, வை -12, பி -200, எம்.ஏ -60 மற்றும் எப் -7 போர் விமானங்கள் உட்பட 24 விமானங்கள் இந்த கண்காட்சியை அலங்கரிக்கின்றன.

மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு செயலாளர் உட்பட முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், இந்திய மற்றும் பங்களாதேஷ் விமானப்படை அதிகாரிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.03.03




No comments

Powered by Blogger.