March 09, 2021

ராவய மூடப்படும் நிலை - தோழர்களே, உதவுங்கள்...!


- Ajaaz Mohamed -

இலங்கையின் முதலாவது மாற்றுப் பத்திரிகையாக கருதப்படுவது ராவய. அதன் பின் வந்த பல மாற்ற்ப்பத்திரிகைக்கு முன்னோடியான பத்திரிகை அது. ஏறத்தாள நான்கு தசாப்த காலங்களாக இலங்கையில் மாற்றுக் கருத்துக்களுக்கும், மாற்றுக்கருத்தாளர்களுக்குமான தளமாக அது இருந்து வந்திருக்கிறது. இன்றைய சிங்கள ஊடகங்களில் காணப்படுகின்ற பல்வேறு வடிவங்கள் அங்கே பரிசோதனை செய்யப்பட்டவை தான். அந்த வடிவங்கள் தமிழிலும் கையாளப்பட்டுள்ளன. இனப் பிரச்சினை குறித்து சிங்கள அரசோடு தொடர்ந்து சண்டை பிடித்து வந்திருக்கிறது. சிங்களப் பேரினவாதத்தை துணிந்து எதிர்கொண்டு துவட்டி எடுத்திருகிறது.

சரிநிகர் பத்திரிகை நின்றுபோனதன் பின்னர் சரிநிகர் “நிகரி” என்கிற பேரில் வெளிக்கொணர களம் அமைத்துக் கொடுத்தது ராவய தான்.

யுக்திய, ஹிரு, லக்திவ, சிதிஜய, என பல பத்திரிகைகள் வருமானமின்றி நின்றுபோன நிலையில் ராவய தாக்குபிடித்து வந்ததற்கு இன்னொரு காரணம் அவர்களுக்கு என்று ஒரு கட்டிடம் இருக்கிறது. வருமானத்தை சரிசெய்வதற்காக நூல்களையும் பதிப்பித்து வந்தார்கள். இடையில் இப்படி நிற்கும் நிலை வந்த போது இலங்கையில் புதிஜீவிக் குழாமினர் முன் வந்து பண உதவி செய்து அதன் பங்குதாரர்களாக ஆனார்கள். இப்போது விக்டர் ஐவன் தனது பங்கை எடுத்துக்கொண்டு விலகுவதாக அறிவித்துவிட்டார். நீண்ட காலமாகவே அப்படி ஒரு பிரச்சினை அங்கு இழுபறிபட்டு வந்தது. இப்போது நீதிமன்ற பிரச்சினையாக ஆகியிருக்கிறது.

5.03.2020 ராவயவைப் பாதுகாப்பதற்கான ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பல சிங்களப் புத்திஜீவிகளும், மூத்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இன்றைய ஊடகங்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சினை வரை அங்கு உரையாடப்பட்டது.

ராவய பத்திரிகையில் பணிபுரிந்துகொண்ட தோழர்கள் பலர் சில மாதங்களாக எந்த சமபளமுமின்றி இலவசமாகத் தான் அங்கே பணிபுரிந்து வருகிறார்கள். சில தோழர்கள் அங்கேயே தங்கி பணிபுரிகிறார்கள். இதே நிலைமை 90 களில் ஹிரு பத்திரிகைக்கு நேரிட்ட போது மக்களிடம் சென்றார்கள். உண்டி குலுக்கினார்கள். பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் தொடக்கம், சாதாரண தொழிலாளர்களும் அப்படி முட்டி குலுக்கி சேகரித்த பணத்தில் மீண்டும் ஹிரு பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார்கள். அது இலங்கையில் ஊடக வரலாற்றில் முக்கியமானதொரு முன்னுதாரணமாகவே பார்க்கிறேன்.

இலங்கையின் ஒடுக்கப்பட்ட இன – வர்க்க – சாதி – பால் பிரச்சினைகளை சிங்கள மக்களிடம் பேசுபொருளாக்கி மக்களிடம் கருத்தையும் தகவல்களையும் கொண்டு போய் சேர்த்த ராவய போன்ற பத்திரிகைகளின் இருப்பு நமக்கு அவசியம். 

மாற்றுப்பத்திரிகைகள் மூச்சிழுத்துக்கொண்டிருப்பதாகவே பலர் கூறுகின்றனர். அந்த நெருக்கடி நிலையை சற்றேனும் சரி செய்து ராவய பத்திரிகையை பாதுகாக்க சிறு சிறு தொகையாயினும் அனுப்பி உதவ வேண்டியது சிறுபான்மை, மற்றும் முற்போக்குச் சிந்தனை கொண்ட தனவந்தர்களின் பொறுப்பாகும். 

7 கருத்துரைகள்:

JM இன் இந்தப் பதிவு சிறுபான்மையினரின் அதுவும் முஸ்லிம்களின் வரலாற்றில் பேசப்படக்கூடிய ஒன்றாகும். பெரும்பான்மைச் சமூகத்தில் முஸ்லிம்களுக்காகப் பேசக்கூடிய பத்திரிகை ராவய ஆகும். அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. தற்போது இருக்கக்கூடிய சிறுபான்மைப் பத்திரிகைகளால் தாங்கள் நினைத்த உண்மையான நடக்கும் அநியாயங்களை விலாவாரியாகப் பயத்தின் காரணமாக எடுத்துக்கூற முடியாத சூழ்நிலையில் சிங்களப்பத்திரிகை ஒன்றினால் அவற்றை நன்கு எடுத்துச் சொல்ல முடியும். மிகவும் அதிகமானவரகளிடம் அச் செய்தி சென்றடையக்கூடும். எனவே நிதிவளமிக்கவர்கள் தங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளையாயினும் "ராவய" வுக்குச் செய்தால் எங்கள் சமூகத்திற்கு செய்யும் பேருதவியாவும் இதனைப் பார்க்கலாம்.

@jaffnamuslim/azaaz mohamed - பணஉதவி செய்ய முன்வருவோர் எங்கே யாருக்கு அனுப்ப வேண்டும். விபரம் தேவை.

Ravaya stands against racism supporting Muslim community in many occasions. The article does not mention how to help them. I.e. need any donation to Ravaya account or buy Ravaya share or what else?

Ravaya stands against racism supporting Muslim community in many occasions. The article does not mention how to help them. I.e. need any donation to Ravaya account or buy Ravaya share or what else?

How we can help them and contribute?

ராவய மாற்றுப் பத்திரிகையை தமிழர் முஸ்லிம்கள் மலையகதமிழரென அனைத்து மிழ்பேசும் மக்களும் முன்வர வேண்டும்.

Post a comment