Header Ads



நான் பள்ளிவாசல் சென்று தண்ணீர் அருந்தினேன், எவரும் தடுக்கவில்லை. என் பெயரையோ மதத்தையோ விசாரிக்கவில்லை


உத்திரப் பிரதேசத்து அலீகர் நகரத்தைச் சேர்ந்தவர் சாகர் சிங் தோமர். இவர் நேற்று பகிர்ந்திருந்த முகநூல் பதிவு இன்று -16- உத்திரப் பிரதேச மக்களை உவப்பில் தள்ளியிருக்கின்றது.

ஆயிரக்கணக்கானோர் புகழ்ந்து, பகிர்ந்து கொண்டாடித் தீர்த்திருக்கின்றார்கள். 

அவர் என்ன எழுதியிருக்கின்றார், தெரியுமா?

‘நான் இன்று பள்ளிவாசலுக்குச் சென்றேன். தண்ணீர் அருந்திவிட்டு வந்தேன். எவரும் என்னைத் தடுக்கவில்லை. என்னுடைய பெயரையோ, மதத்தையோ விசாரிக்கவில்லை’.


இதில் வியப்புக்கும் மலைப்புக்கும் என்ன இருக்கின்றது? பள்ளிவாசல் இறைவனின் இடம். இறைவனோ அனைவருக்கும் உரியவன். இஸ்லாமோ முஸ்லிம்களின் குலச் சொத்தல்ல. எல்லா மனிதர்களுக்காகவும் அருளப்பட்ட நெறிதான் இஸ்லாம், என்றுதானே சொல்கின்றீர்கள்? 

நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க சரி. ஆனால் இன்று வட இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை விதைத்து, வன்மத்தைக் கிளறி, அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தப்படுகின்ற வெறுப்பரசியல் உச்சத்தில் இருக்கின்றது. 

இதனால் சாகர் சிங் தோமர் அவர்களின் பதிவு வியப்புக்குரியதாகக் கொண்டாடப்படுகின்றது.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.


இந்த நிகழ்வு நடந்தது உபி மாநிலம் காஜியாபாத்.

'உன் பெயர் என்ன?'

'ஆஸிஃப்'

'உன் தகப்பனின் யெர் என்ன?'

'ஹபீப்'

'கோவிலில் என்ன செய்கிறாய்?'

'தாகமெடுத்ததால் தண்ணீர் அருந்த வந்தேன்'

உடனே அந்த இந்துத்வ குண்டர்கள் அந்த சிறுவனை கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். தண்ணீர் அருந்த கோவிலுக்குள் செல்வது அவ்வளவு பெரிய குற்றமா? 

தினந்தோறும் பள்ளிவாசலில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் தண்ணீர் எடுத்துச் செல்கிறார்களே. புயல், வெள்ளம் பாதிப்புகளில் பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டு உணவும் நீரும் கொடுக்கப்படுகின்றதே! இதெல்லாம் கண்மூடித்தனமாக தாக்கும் அந்த குண்டர்களுக்கு விளங்குமா?

மோடியும், அமித்ஷாவும் இந்து இளைஞர்களை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் உதாரணம். இவர்களால் இந்து மதம் வளர்ச்சியுறாது. மாறாக இந்து மதத்தின் வீழ்ச்சிக்கு இவர்களே காரணமாவார்கள்..

மொழி பெயர்ப்பு

சுவனப்பிரியன்.

1 comment:

Powered by Blogger.