Header Ads



சீனாவின் கடன் பொறியில், இலங்கை போன்று கஷ்டத்தில் விழாது கவனமாக செயற்படுகிறோம் - பங்களாதேஷ்


சீனாவுடன் செயற்படும் போது மிகவும் கவனத்துடன் செயற்படுவதாகவும் இலங்கை போன்று கஷ்டத்தில் விழாது கவனமாக செயற்பட்டு வருவதாகவும் பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆலோசகர் ஒருவரை மேற்கோள்காட்டி அந்நாட்டு பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் பல நாடுகள் தற்போது சீனாவின் அழுத்தங்களுக்கு அடிப்பணிய நேரிட்டுள்ளதாகவும் பங்களாதேஷ் பிரதமரின் ஆலோசகர் கூறியுள்ளார். இலங்கை சீனாவின் கடன் பொறியில் சிக்கியுள்ளது. நாங்கள் சீனாவின் அந்த பொறிக்குள் சிக்காது விடயங்களை கையாள்வோம்.

இலங்கை, சீனாவுடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடும் போது பெரும் கஷ்டத்தில் விழுந்த விதத்தை நன்றாக புரிந்து கொண்டு, அதில் பாடத்தை கற்று பங்களாதேஷ் அரசாங்கம் மிகவும் கவனமாக சீனாவுடன் கொடுக்கல், வாங்கல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அப்படியானால் ஸ்விப் அடிப்படையில் எங்களுக்கு ஒரு பில்லியன் டொலர் கடனாகத் தரமுடியுமா? கடன் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள் வோம் ஆனால் எப்போது கடனைத்திருப்பித் தருவாய் என்ற கேள்வி மட்டும் கேட்கவேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.