Header Ads



முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காக, கௌரவத்திற்காக நாங்கள் உங்களோடு இருப்போம் - அப்துல் சத்தார்


- இக்பால் அலி -

இலங்கை முஸ்லிம் சமூகம் யதார்த்தத்தை உணர்ந்து விதண்டா வாதங்களையும் வீண் பேச்சுக்களையும் விட்டுவிட்டு ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டிய சேவைகள் சம்மந்தமாக சிந்திக்க வேண்டிய முக்கிய காலமிது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளருமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.

குருநாகல் நகரில்; சிங்கள மொழி பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளின் சீருடை சம்மந்தமாக குருநாகல் நகரின் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகளின் பெற்றார்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய அப்துல் சத்தார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்

இன்று கடந்த அண்மிய கால இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பிழையான வழிநடத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் இன்று நாட்டில் பாரிய சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு துரதிருஷ்டமான நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. விசேடமாக முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்பவர்கள் அன்றாடம் மிகவும் சங்கடமான நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். 

இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் கூடுதலானவர்கள் முஸ்லிம் சமூகத்துடன் மிகவும் இணக்கப்பாட்டுடன் வாழ்ந்தாலும்  எதிர்க்கட்சியைச் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் இனவாதப் பேச்சுக்கள் அரசியல் இலாபத்திற்கான நடவடிக்கைகள் மூலம் சில  இனவாத எண்ணம் கொண்ட ஒரு சிலருக்கு முஸ்லிம்கள் மீது வீணாக குற்றம் சுமத்துவதற்கு அல்லது சந்தேகப்படுவதற்கு வசதியை அமைத்துக் கொடுத்துள்ளது.

இந்ந நிலையில் இருந்து மீள்வதற்கு பெரும்பான்மை சமூகத்திலும் நல்லெண்ணத்தை முஸ்லிம்களாலேயே தான் உருவாக்க முடியும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாக்களிக்கா விட்டாலும் இன்று ஆட்சியிலுள்ள அரசாங்கம் மிகவும் ஸ்தீரத் தன்மையுடையது. ஆதலால் அந்த அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதன் மூலம் எங்களுக்குரிய காரியங்களை செய்து கொள்ள முடியாது. விசேடமாக எங்கள் மனதில் வேதனையைத் தந்த கொவிட் தொற்றின் மூலம் மரணித்த முஸ்லிம்களின் எரிப்பு விடயம் அரசியல் விடயமாக காட்டப் பட்டாலும் இன்று சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஆரம்பத்திலேயே எமது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதை பிரச்சினை ஏற்படாதவாறு நல்ல முறையில் தீர்த்துத் தருவதாக எம்மிடம் உறுதியளித்திருந்தார்.

இருந்தாலும் சிலர்  துரதிருஷ்டமான அரசியல் நடவடிக்கைகளால் இந்த விடயம் காலம் கடத்தப்பட்டது. என்றலும் இந்த விடயத்தை மிகவும் நல்ல முறையில் தீர்த்துத் தந்து முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட விசேடமாக நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பளீழ், அதாவுல்லாஹ் உட்பட இது சம்மந்தமாக நல்ல எண்ணத்துடன் எமக்கு அயராது பாடுபட்ட அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டியதும் அவர்களின் எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்ய வேண்டியதும் எங்கள் கடமையாகும். இதேபோன்று  இன்று ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் என்ற கையில் இந்த நாட்டின் முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காக கௌரவத்திற்காக நாங்கள் உங்களோடு இருப்போம் என்பதை உறுதியாக கூறிக் கொள்வதுடன் தேர்தலின்போது முஸ்லிம் சமூகம் எங்களை மாற்றுக் கண்ணுடன் பார்த்தாலும் நானும் எமது அரசாங்கமும் மக்களின் பிரச்சினைகளின் போது அரசியல் பேதம் பார்க்க மாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. Mr. Abdus Sattar

    You may be getting some personal benefits from this Govt., but the Muslim Community as a whole Suffered Immensely under this Govt. The Muslim Community NEVER Suffered like this under Any of the Previous Govts.

    No Muslim with any Self Respect will vote for this Govt., leave alone support or otherwise expect anything good from this Govt.

    Any Muslim who supports this Govt. must either be involved in Shady Deals or waiting for Crumbs. Such people are Shameless and are Real Back-Stabbers. And, no doubt, you are one of them. Shame on you, man.

    ReplyDelete
  2. Anyway Muslims will never forget or forgive the Rajapaksa govt regarding the cremation issues. It is well-known fact that the sudden change was due to the Geneva issue. Any way Rajapaksa can not undo the cremation they executed on Muslims" janazas in the past. If you peruse the history Rajapaksas have done more harms to the Muslim Community than any one else.

    ReplyDelete

Powered by Blogger.