Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக நாங்களும், மக்களுடன் சேர்ந்து வீதியில் இறங்கவேண்டிய நிலையேற்படும்


அரசாங்கம் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துவரும் நிலையில் இதற்கு தீர்வை காண்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்சதலையிடவேண்டும் என பௌத்த மதகுரு முருத்தெட்டுவேவ ஆனந்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாரஹென்பிட்டிய அபயராம விகாரையில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் செய்யாதது எதுவுமில்லை,நாட்டுக்கு அரசாங்கம் சேவையாற்றும் என்ற கருத்து மக்கள் மத்தியில் காணப்பட்டது ஆனால் தற்போது நாங்கள் பதிலளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது என அவர்தெரிவித்துள்ளார்.

வைத்தியர் அமால்சில்வா உடனடியாக வேறு இடத்திற்கு இடமர்ற்றம் செய்யப்பட்டுள்ளார், எங்கு புண்ணாக்கு தயாரிக்கவா என கேள்வி எழுப்பியுள்ள பௌத்த மதகுரு அவர் விலங்குகள் உணவு தயாரிக்கும் திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர் அனில் ஜயசிங்க புற்களை வெட்டும் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார் வேறு பலர் இடமாற்றப்படவுள்ளனர் என பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார்.

மக்கள் எழுப்பும் கேள்விகளிற்கு எங்களிடம் பதில் இல்லை,ஜனாதிபதியவர்களே என குறிப்பிட்டுள்ள முருத்தெட்டுவேவ ஆனந்த தேரர் இதற்காகவா இந்த அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு பௌத்த மதகுருமார்ர்கள் தலையிட்டனர் என மக்கள் எங்களிடம் கேட்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு இந்த பிரச்சினை குறித்து தெரிவித்தால் அவர் தலையிடுகின்றார் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாங்களும் மக்களுடன் சேர்ந்து வீதியில் இறங்கவேண்டிய நிலையேற்படும் என நான் நம்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் மூடிய கதவுகளிற்கு பின்னால் காணப்படுகின்றார்அவரை தொடர்புகொள்ள முடியவில்லை நாட்டை நிர்வாகிக்கும் முறைஇதுவா என கேள்விஎழுப்பியுள்ள அவர் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காணுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கு எவரும் இல்லாவிட்டால் அவரால் எவ்வாறு தொடர்ந்து பணியாற்ற முடியும் எனவும் அவர் கேள்விஎழுப்பியுள்ளார்.

பிரதமர் ராஜபக்ச அவர்களே ஜனாதிபதி உங்கள் சகோதரர் அவர் ஜனாதிபதி பதவியை பார்க்கட்டும், நீங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இல்லாவிடில் இந்த அரசாங்கம் இப்படியே தொடரமுடியாது,பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கின்றது,எனவும் அவர் தெரிவி;த்துள்ளார்

அதிருப்தியடையாத ஒருவரை காண்பியுங்கள் என நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் ஏனென்றால் அனைவரும் அதிருப்தியடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.