Header Ads



புர்கா தடையானது முஸ்லிம் பெண்களின், மனித உரிமைகளை மீறும் செயல் - சரூர்


புர்கா அணிவதற்கு தடை விதிக்கும் செயற்பாடானது முஸ்லிம் பெண்களின் மனித உரிமைகளை மீறும் செயல் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்ரீன் சரூர் தெரிவித்துள்ளார்.

புர்கா அணிவதற்கு தடை விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் அது நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் புர்கா அணிவதை தடை செய்வது தொடர்பில் முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாட வேண்டும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்ரீன் சரூர் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. உண்மைதான். புர்காவைத் தடை செய்வது என்பது இஸ்லாமியப் பெண்களுடனும் சமயத்துடனும் சம்பந்தப்பட்ட விடயம். ஒரு இனத்திடம் பெரும்பான்மை இருக்கின்றபோது இவ்விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்குச் செல்லுமாயின் அது 2ஃ3 பெரும்பான்மையைக்கூட பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி நடக்குமாக இருந்தால் அது வக்கிரமிக்க ஆட்சியாகவே பார்க்கப்படும். ஒரு ஜனநாயக அரசு என்பது ஒரு நாட்டிற்கான பூர்த்தியான ஆட்சியினை வழங்குவதோடு நேர்மையாகவும் உண்மையாகவும் நாட்டில் வாழும் பலதரப்பட்ட மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஆட்சியினைக் கொடுக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஆட்சியாளர்கள் ஒருதலைச்சார்பற்றவர்களாகவும் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை விலக்கி அரசியலுக்கும் சட்டத்திற்கும் இணங்கி பல தரப்பட்ட மக்களுக்கும் குறைவற்ற சமமான சேவைகளைப் புரியக்கூடியவரகளாகவும் இருத்தல் வேண்டும். இதுதான் பூரண ஜனநாயக ஆட்சிமுறைமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.