Header Ads



ஓட்டமாவடியில் மாத்திரமே கொரோனா, உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி - அமைச்சரவை இணைப்பேச்சாளர்


கொவிட் 19 சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 

இரணைதீவில் கொவிட் 19 சரீரங்களை அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில்  ஊடகவியலாளர் ஒருவர் இன்று(09) முற்பகல் இடம்பெற்ற  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன, கொவிட் 19 ஆல் உயிரிழப்பவர்களின் சரீரங்களை மட்டக்களப்பு - ஓட்டமாவடி - சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்வதற்கான அனுமதி மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும், உரிய ஆய்வின் பின்னரே சுகாதார அமைச்சு இரணைதீவில் கொவிட் 19 சரீரரங்களை அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.