Header Ads



புர்காவுக்கு எதிரான தடை, இஸ்லாத்திற்கு எதிரானதல்ல - சரத் வீரசேகர

-TW -

முகத்தை முழுமையாக மூடிய புர்கா ஆடைக்கான தடை தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே தவிர இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், முன்மொழியப்பட்ட புர்கா மற்றும் நிகாப் தடையானது, ராஜபக்ச அரசாங்கத்தால் முன்மொழியப்படவில்லை.

மாறாக முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட முன்னாள் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டதொன்று என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உத்தேச தடை இன்னும் அமைச்சரவையில் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் முன்மொழியப்பட்ட முகம் மறைக்கும் ஆடைக்கான தடை தொடர்பில் ஒருமித்த கருத்தை எட்டிய பின்னர் அது அமுல் செய்யப்படும் என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. மக்களுடைய நல்வாழ்வு அவரகள் தம் அன்றாட அலுவல்களை எவ்வித தடைகளுமின்றி கொண்டு செல்வது; நல்லிணக்கம்; எந்தவித தடைகளுமின்றி மக்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வுடன் தம் அன்றாடக் கடமைகளைக் கொண்டு செல்வது; அந்தந்த மனிதர்களுக்கு அவரவர் இயல்புகளுக்கேற்ப மரியாதையினை அளிப்பது என்'பd vy;yhk; ஜனநாயகத்தின் பண்புகள் மாத்திரம் அன்றி மனித நேயப் பண்புகளும்கூட இலங்கையில் பல மதங்கள் இருக்கின்றன. ஆனால் இஸ்லாம் கட்டுப்பாட்டோடு கூடிய மதம் என்பதனை எவராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு மதத்தினைப் பினபற்றுபவர்களும் தங்கள் மதத்தைப்பற்றிப் பெரிதாகத்தான் பேசுவார்கள். ஒரு இந்து ஐயர் இருக்கின்றார். அவர் அணிந்துள்ள பூநூலால் அவருக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை. ஆனால் அது அவரது மதவிழுமியங்களுல் மிகவும் பிரதானமான ஒன்று. இப்படியே ஒவ்வொருவரினதும் மதக் கொள்கைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தம்தம் மதத்தினைப் பின்பற்றி சீரும் சிறப்புமாக வாழ்வது நாடு சிறப்பாக வாழ்கின்றமைக்குச் சமம். ஒவ்வொரு மனிதனும் தம் அயல் வீட்டிக்கு கண்ணியமான எண்ணங்களுடன் சென்று அவரகளுடன் கூடிப்பழகி அவரகளுடைய வீட்டில் உண்டு கழித்து வருகின்றானோ அப்போதுதான் நாட்டில் ஒற்றுமை மேலோங்கும். நாடும் செழிப்புறும். ஆணோ பெண்ணோ அவரகள் என்று சுதந்திரமாக வெளியே சென்று தம் கடமைகளை முடித்து பத்திரமாக வீட்டுக்குத் திருமபுகின்றார்களோ அன்றுதான் மக்கள் இயல்பாகவே சுதந்திரமடைந்தவரகள் ஆகின்றார்கள். இந்த நிலைமை எங்கள் நாட்டிற்கு எப்போது வரும். அதற்கு எமது அரசியல்வாதிகள் விடுவார்களா. இந்தப் பிரிவினைகளில்த்தான் அவரகளது எதிர்காலமே இருக்கின்றது

    ReplyDelete
  2. பைத்தியம் முத்திபோச்சி

    ReplyDelete
  3. ஆப்பிழுத்த குரங்கின் கதையோ.

    ReplyDelete
  4. According to former President Maithreepala Sirisena, you organised violence against Muslims in Ampara when you were not in power. Now you are in power attacking Muslims one after one by using your portfolio.

    ReplyDelete

Powered by Blogger.