Header Ads



இஸ்­லா­மிய புத்­த­க இறக்­கு­மதிக்கு தடையா..? பாதுகாப்பு அமைச்சின் விளக்கம் என்ன...??


- ஏ.ஆர். ஏ.பரீல் -

எதிர்­கா­லத்தில் வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் அனைத்து இஸ்­லா­மிய சமய புத்­த­கங்­களும் பாது­காப்பு அமைச்­சினால் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு பாது­காப்பு அமைச்சு அனு­மதி வழங்­கினால் மாத்­தி­ரமே இலங்கை சுங்க திணைக்­க­ளத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எவ்­வித பொறுப்­பு­மின்றி அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மிய கொள்­கை­களை உள்­ள­டக்­கிய புத்­த­கங்கள் மற்றும் வெளி­நா­டு­களில் தடை­செய்­யப்­பட்­டுள்ள ஆசி­ரி­யர்­க­ளினால் எழு­தப்­பட்­டுள்ள புத்­த­கங்கள் என்­ப­ன­வற்றை இறக்­கு­மதி செய்தல், விநி­யோ­கித்தல் மூலம் சமய நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­தகம் ஏற்­ப­டு­கி­றது. இத­னாலே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என பாது­காப்புச் செய­லாளர் ஜெனரல் கமல் குண­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்­லா­மிய மத புத்­த­கங்­களை சுங்கத் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து விடு­விப்­பது தொடர்பில் புத்­த­சா­சன மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் பேரா­சி­ரியர் கபில குண­வர்­த­ன­வுக்கு பாது­காப்பு செய­லாளர் கமல் குண­வர்­தன அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­திலே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். குறிப்­பிட்ட கடி­தத்­திலே மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது;

பேரு­வ­ளையில் இயங்­கி­வரும் நப­வியா இஸ்­லா­மிய இளைஞர் அமைப்­புக்கு கட்டார் நாட்­டி­லி­ருந்து 90 புத்­த­கங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்தப் புத்­த­கங்­களை சுங்க பிரி­வி­லி­ருந்து விடு­விப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அனு­மதி கோரப்­பட்­டி­ருந்­தது. அதற்­கான அனு­ம­தியை திணைக்­களம் வழங்­கி­யி­ருந்­தது.

மேலும் குறிப்­பிட்ட நப­வியா அமைப்பின் செய­லாளர் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ருக்கு 90 புத்­த­கங்­களின் விப­ரங்­களை குறிப்­பிட்டு அவற்றை இலங்கை சுங்கப் பிரி­வி­லி­ருந்தும் விடு­விப்­ப­தற்­கான அனு­ம­தியைக் கோரி­யி­ருந்தார்.

அத­னை­ய­டுத்து 90 புத்­த­கங்­களில் 4 புத்­த­கங்கள் சமய நல்­லி­ணக்­கத்­துக்கு சவால்­களை ஏற்­ப­டுத்தும் சலபி மற்றும் வஹாபி அதி­தீ­விர இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கை­களை உள்­ள­டக்­கி­யுள்­ள­தாக பரி­சீ­ல­னை­யின்­போது அறி­யப்­பட்­ட­தாக சுங்­கப்­பி­ரிவு பாது­காப்பு அமைச்­சுக்கு அறி­வித்­தது. இத­னை­ய­டுத்து அந்த நான்கு புத்­த­கங்கள் விடு­விக்­கப்­ப­டு­வது இடை­நி­றுத்­தப்­பட்­டது.

இத்­தோடு இதன் பிறகு இவ்­வாறு இறக்­கு­மதி செய்­யப்­படும் புத்­த­கங்கள் விடு­விக்­கப்­ப­டு­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அனு­மதி வழங்­கு­வ­தற்கு முன்பு பாது­காப்பு அமைச்சின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மென கடிதம் மூலம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் இது தொடர்பில் விசா­ரித்­ததில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால், பாது­காப்பு அமைச்சு விடு­விப்­ப­தற்கு சிபா­ரிசு செய்­யாத 4 புத்­த­கங்­களின் பெயர்கள் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட புத்­த­கப்­பட்­டி­யலில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை எனத்­தெ­ரி­வித்து 45 புத்­த­கங்­களின் பட்­டியல் மாத்­திரம் பாது­காப்பு அமைச்­சுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு இது தொடர்பில் விசா­ர­ணை­யொன்று நடத்­தி­ய­தா­கவும் அந்த புத்­த­கப்­பட்­டியல் ஏற்­று­ம­தி­யாளர் மூலம் நப­வியா இஸ்­லா­மிய இளைஞர் அமைப்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது எனவும் திணைக்­களம் குறிப்­பிட்­டுள்­ளது. மேலும் புத்­த­கங்கள் வாசி­க­சா­லைக்­கா­கவே இறக்­கு­மதி செய்­யப்­பட்­ட­தென்றும் அது­த­விர புத்­த­கங்­களின் பெயர்கள் உள்­வாங்­கப்­ப­டா­மைக்கு வேறு கார­ணங்கள் எது­வு­மில்லை எனவும் நப­வியா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை திணைக்­க­ளத்தின் இந்தப் பதில் தொடர்பில் ஆராய்ந்­ததில் பதிலை பணிப்­பாளர் அவ்­வாறே ஏற்­றுக்­கொண்­டமை, இது தொடர்­பான அனு­ம­தியை வழங்­கிய அதி­கா­ரியை ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தாது பாது­காப்­ப­தற்­கான முயற்­சி­யாகத் தெரி­கி­றது.

அதனால் எவ்­வித பொறுப்­பு­மின்றி அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மிய கொள்­கை­களை உள்­ள­டக்­கிய நூல்கள் மற்றும் வெளி­நா­டு­களில் தடை செய்­யப்­பட்­டுள்ள நூலா­சி­ரி­யர்­களின் புத்­த­கங்கள் இறக்­கு­மதி செய்தல்,விநி­யோ­கித்தல் மூலம் இந்­நாட்டின் சமய நல்­லி­ணக்­கத்­துக்கு பாதகம் ஏற்­ப­டுத்தும் என்­பதை அறி­யத்­த­ரு­கிறேன்.

இதன்­பி­றகு இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் அனைத்து இஸ்­லா­மிய சமய புத்­த­கங்கள் பாது­காப்பு அமைச்­சினால் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு அனு­மதி வழங்­கப்­பட்­டபின் மாத்­திரம் சுங்­கப்­பி­ரிவு ஊடாக விடு­விக்­கப்­படும் என்­பதை அறி­யத்­த­ரு­கிறேன் என குறிப்­பிட்­டுள்­ளது.

நப­வியா இளைஞர் அமைப்பின் விளக்கம்

நப­வியா இஸ்­லா­மிய இளைஞர் அமைப்பு கட்­டா­ரி­லி­ருந்து இறக்­கு­மதி செய்த எந்­த­வொரு புத்­த­கமும் சலபி மற்றும் வஹாபி இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கை­களை உள்­ள­டக்­கி­ய­தாக இல்லை. அப்­புத்­த­கங்கள் தீவி­ர­வா­தத்தை ஊக்­கு­விப்­ப­தாக இல்லை. 4 புத்­த­கங்­களும் முறை­யாகப் படித்துப் பார்க்­காது பாது­காப்பு அமைச்­சினால் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. இப்­புத்­த­கங்கள் நூற்­றுக்கு 100 வீதம் தீவி­ர­வாத சிந்­த­னை­களை உள்­ள­டக்­கி­ய­தாக இல்லை என நப­வியா இஸ்­லா­மிய இளைஞர் அமைப்பின் செய­லாளர் காமில் ஹுசைன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் ‘ புத்­த­கங்­களில் சுன்­னத்துல் வல் ஜமா அத்தின் பாடங்­களே உள்­ள­டங்­கி­யுள்­ளன .எமது இயக்கம் சூபி தரிக்­காவின் இயக்கம். நாங்கள் சூபித்­து­வத்­துக்கே ஊக்­க­ம­ளிக்­கிறோம்.

புத்­த­கங்கள் கட்­டா­ரி­லி­ருந்த அன்­ப­ளிப்­பா­கவே கிடைத்­தன. இவற்றை எமது வாசி­க­சா­லைக்­கா­கவே நாம் இறக்­கு­மதி செய்­தோ­மே­யன்றி விநி­யோ­கிப்­ப­தற்­கல்ல. எமது இயக்கம் பாரம்­ப­ரி­ய­மா­னது.175 கால வரலாற்றைக் கொண்டது. விடுவிக்கப்படாத 4புத்தகங்களின் உள்ளடக்கத்தின் தலைப்புகள் சலபித்துவம், வஹாபிஸம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் உள்ளடக்கம் இக்கொள்கைகளுக்கு எதிரானவையாகவே உள்ளது. இப் புத்தகங்களை படித்துப்பாருங்கள். எவ்வித தீவிரவாதக் கொள்கைகளும் இல்லை. புத்­த­கங்­களின் உள்­ள­டக்­கத்தின் தலைப்­பு­களை மாத்­திரம் வாசித்­து­விட்டு தடை­செய்­யப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­யது.

வெளி­யூர்­களில் தடை செய்­யப்­பட்ட நூலா­சி­ரி­யர்­களின் புத்­த­கங்கள் என்றால் அர­சாங்கம் தடை­செய்­யப்­பட்­டுள்ள நூலா­சி­ரி­யர்­களின் பெயர்­களை ஏற்­க­னவே எமக்கு அறி­வித்­தி­ருக்க வேண்டும். எமது இயக்கம் சலபி, வஹா­பி­சத்தை ஊக்­கு­விக்­க­வில்லை என்­பதை உறு­தி­யாகக் கூறு­கிறோம். தீவிரவாதத்தை எதிர்க்கும் இயக்கமே எமது இயக்கம் என்றார்.  

- Vidivelli -

No comments

Powered by Blogger.